Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஆம்ஸ்ட்ராங் தான் இருக்கிறார் என கருதி, அவரைப் பழித் தீர்த்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் இந்த படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து வருகின்றனர். கொலையாளிகளுக்கு பின்னணியில் வேறு சில கும்பல் இருக்கலாம் எனவும் பொருளாதார ரீதியாக அவர்கள் உதவி இருக்க கூடும் எனவும் கூறி வருகின்றனர். அதே வேளையில் காவல்துறை தரப்பிலும் முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளது.

தமிழக அரசு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சாட்டை துரைமுருகன் கைது

ஆற்காடு சுரேஷ் கொலைச் சம்பவம் மட்டுமே காரணமா? ஆம்ஸ்ட்ராங்கின் வேறு யாரேனும் பொதுவான எதிரிகள் இதன் பின்னணியில் உள்ளனரா? மேலும் ஆருத்ரா விவகாரம் பேசப்பட்டு வரும் நிலையில் அதில் ஆற்காடு சுரேஷ் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் தலையீடு என்ன என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஏழு நாட்கள் காவல் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை மேஜிஸ்ட்ரேட் தயாளன் நடத்தினார். பாதுகாப்பு கருதி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கைது செய்யப்பட்டவர்களை ஆஜர்படுத்தினர். விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்ட 11 நபர்களுக்கு ஐந்து நாட்கள் போலீஸ் காவல் வழங்கி மேஜிஸ்ட்ரேட் தயாளன் உத்தரவிட்டார்.

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல – திருமாவளவன்

பூந்தமல்லி கிளை சிறையில் உள்ள 11 நபர்களையும் தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். குறிப்பாக கொலையாளிகளுக்கு நிதி உதவி, சட்ட உதவி அளிப்பது, கொலையின் பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்தும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பொன்னை பாலுவுக்கு கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது யார் என்பது தொடர்பாகவும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்களை அழைத்து கொலையாளிகள் அனைவரையும் சிறையில் வரிசையாக நிற்க வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ