Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - யார் இந்த சம்போ செந்தில்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?

-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?

தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு, தண்டையார்பேட்டை பகுதியில் நடத்தி வந்த நிறுவனத்தில் கல்வெட்டு ரவியிடம் பணியாற்றி வந்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - யார் இந்த சம்போ செந்தில்?

ஆரம்பகாலங்களில் ரவுடிகளின் வழக்குகளை மட்டுமே எடுத்து நடத்தியதால் வழக்கறிஞர் செந்தில் குமார் ரவுடிகளுடன் நெருக்கம் ஏற்பட்டு பின் கல்வெட்டு ரவியுடன் இணைந்தார்.

ஒரு நாள் கல்வெட்டு ரவியை தாக்க, ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி ஆகியோரது கூட்டாளிகள் முயன்ற போது, அவரைக் காப்பாற்ற செந்தில் குமார் களம் இறங்கினார்.

செந்தில் குமாராக களமிறங்கியவர், ஸ்கெட்ச் போடுவதிலும், சம்பவம் எனப்படும் குற்றச் சம்பவங்களை துல்லியமாக செய்வதால், சம்பவம் என்ற அடைமொழி பெற்று சம்போ செந்தில் என அழைக்கப்பட்டார்.

வசதிபடைத்த குடும்ப பின்னணியில் இருந்து வந்துள்ள சம்போ செந்தில், வெங்கடேஷ் பண்ணையாருக்கு நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - யார் இந்த சம்போ செந்தில்?

காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு காவல் எல்லையில் வழக்கறிஞர் காமேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சம்போ செந்தில், பின்னர் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திருப்போரூர் ரியல் எஸ்டேட் அதிபர் ரவீந்திரகுமார் கொலை வழக்கில், சம்போ செந்தில் மூளையாக செயல்பட்டார் என்று காவல்துறை கூறுகிறது.

முத்தியால்பேட்டையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி என்று சொல்லப்பட்ட விஜயகுமார் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் சம்போ செந்தில் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆனால், இதுவரைக்கும் எந்த வழக்கிலும் சம்போ செந்திலை போலீசாரால் கைது செய்யமுடியவில்லை. ஒரு கட்டத்தில், ரவுடி கல்வெட்டு ரவி ஒதுங்கிவிட, ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சிடி மணி உள்ளிட்ட கும்பலுக்கு எதிர்க்கும் பல தலைவனாக சம்போ செந்தில் வலுவாக வளர்ந்து விட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எண்ணூரில் காருக்குள் வைத்து ஒப்பந்ததாரர் ஜேம்ஸ்பால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எண்ணூர் கும்பலுக்குள் பகை வெடித்துள்ளது.

ஒருவர் மாறி ஒருவர் என இரு கும்பலுக்கும் இடையில் நடந்த மோதலில் இதுவரை 5க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறது சென்னை காவல்துறை.

கடந்த 2020 ஆம் ஆண்டு சம்போ செந்திலின் கூட்டாளிகள் ஈசா மற்றும் எலி யுவராஜ் ஆகியோரின் ஏற்பாட்டின் அடிப்படையில்தான், அண்ணா சாலையில் சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் திட்டம் நடத்தப்பட்டது.

4 கொலை வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தலைமறைவாகி இருந்து வரும் சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் முக்கிய நபராக தொடர்பிருப்பது தெரியவந்திருப்பதால் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சம்போ செந்தில் அதன் பிறகு பல வழக்குகளில் தலைமறைவாகி இருப்பதால் சம்போ செந்தில் அடையாளம் காண்பதே கடினம் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குற்றச்சம்பவங்களை நிகழ்த்தி விட்டு நேபாள், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தலைமறைவாகி வாழ்ந்து கொண்டிருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய புள்ளிகள் மற்றும் ரவுடிகளை கொலை செய்வதில் ரவுடி சம்போ செந்தில் பங்கு என்பது முக்கியமாக இருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து கொண்டே தனது நெட்வொர்க்கை இயக்கும் சம்பவம் செந்தில் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்திலும் ஸ்கெட்ச் போட்டதில் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ரவுடி சம்போ செந்திலை காவல்துறையினரால் நெருங்க முடியாத காரணத்தினால் அவருடைய சமீபத்திய படம் கூட காவல்துறையிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது போலீசாரின் கவனம் சம்போ செந்திலை நோக்கி இருக்கிறது. தற்போது நேபாள நாட்டில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சம்பவம் செந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ