Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை - அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை – அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!

-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அஸ்வத்தாமனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளயது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். திருவேங்கடம் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி.

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புள்ளதாக வழக்கறிஞர் அஸ்வத்தமானையும், அதனை தொடர்ந்து அவரது தந்தையும் வடசென்னை ரவுடியுமான நாகேந்திரனையும் அடுத்தடுத்து செம்பியம் தனிப்படை போலிசார் கைது செய்தனர். இந்த நிலையில், ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதனை அடுத்து அவரிடம் தனிப்படை போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

விசாரணையின்போது எந்த விவகாரத்தில் ஆம்ஸ்டிராங் உடன் மோதல் போக்கு ஏற்பட்டது?, எத்தனை ஆண்டுகளாக உங்கள் தரப்புக்கும் ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும் முன் விரோதம் இருந்தது? என கேள்வி எழுப்பினர். மேலும் ரவுடி நாகேந்திரன் சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங்கை மிரட்டியது உண்மையா? என்றும், கொலையாளிகளை எப்படி ஒருங்கிணைத்தீர்கள்? அவர்களுக்கு யார் யார் மூலமாகப் பணம் விநியோகம் செய்யப்பட்டது? என அஸ்வத்தாமனிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் அளிக்கும் பதிலை வீடியோவக பதிவு செய்தனர்

MUST READ