ஆருத்ரா மோசடி – பாஜக நிர்வாகி உட்பட 21 பேர் கைது
ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்கின்றனர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் TNFID நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சத்து பேருக்கும் மேல் முதலீட்டை பெற்று விவகாரத்தில் 2438 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு 6.35 கோடி பணம், 1.13 கோடி தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், 22 கார்கள், 96 கோடி வங்கி கணக்கு வைப்பில் இருந்த பணம் முடக்கம் செய்து 103 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டது.

இந்த வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். நாளை இது தொடர்பான ஆதாரங்கள் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.