பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இவ் வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்து வரும் நிலையில், மிகப்பெரிய ரவுடிகள் ஆன சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களை ஒவ்வொருவராக கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்ட போது அதிக அளவிலான பணப் பரிமாற்றம் நடந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களின் வங்கி கணக்கு பணபரிவர்த்தனைகள், சொத்து பட்டியல், வலையில் கிடைத்த பணத்தை எதில் பயன்படுத்தியுள்ளனர் என்ற முழு விவரங்களையும் போலீசார் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எவ்வளவு பணம் கைமாறி இருப்பதையும் போலீசார் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரவுடிகளின் சொத்துக்கள் மற்றும் அவர்களது பணத்தை முடக்கினால் ரவுடிசம் கட்டுப்படுத்தப்படும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.