Homeசெய்திகள்க்ரைம்பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

-

- Advertisement -

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பெண் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளர் சையத் மஹமூத்-தை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.பொதுமக்களிடம் வசூலித்த முதலீட்டு பணத்தை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனர்,   சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனரா? என போலீசார் தீவிர விசாரணை.பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

சேலம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை  தொடங்கி,  அதன் நிறுவன  தலைவராக  வேலூரை சேர்ந்த பாஜக முன்னாள்  பெண் நிர்வாகி விஜயபானு,  சேலத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா ,  பாஸ்கர் ஆகியோர் நடத்தி வந்தனர்.  இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் பணம் முதலீடு செய்தால்,  இரண்டு மாதத்தில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என  பொதுமக்களை கவரும் வகையில்,  பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ,  பலநூறு கோடி ரூபாய் முதலீடு பெற்றனர்.

இதில்  மோசடி நடப்பதாக  அறிந்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ,  கடந்த வியாழக்கிழமை  அந்த திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஏராளமான மக்கள் பணத்தை முதலீடு செய்து கொண்டிருந்த்தையும் ,  அதற்கு முறையாக ரசீது எதுவும் தராததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  மேலும் அங்கு   கட்டு கட்டாக பணம் குப்பை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மோசடி நடப்பதை உறுதி செய்து , அங்கு குவித்து  வைத்திருந்த 12 கோடியே 65 லட்ச ரூபாய் ரொக்க பணம்,  இரண்டரை கிலோ தங்கம் ,

13 கிலோ வெள்ளி , அரிசி மூட்டைகள்  ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  மேலும் அரசின் எந்த ஒரு அங்கீகாரமும்  இல்லாமல் முறைகேடாக மக்களிடம் முதலீடு வசூலித்ததாக அறக்கட்டளை நிர்வாகி விஜயபானு ,  ஜெயப்பிரதா ,  பாஸ்கர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் உதவியாளர் கைது – போலீஸ் தீவிர விசாரனை

மேலும் இந்த மோசடி  தொடர்பாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு புகாரினை  பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த மோசடிக்கு காரணமான மேலும் சிலரை பிடித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.  இதில் அறக்கட்டளையின் நிர்வாகி விஜயபானுவின் உதவியாளராக இருந்து கொண்டு ,  பணம் முதலீட்டை திரட்டிய  சையத் மஹமூத் என்ற நபரை நேற்று  போலீசார் கைது செய்தனர்.

இவர் வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். விஜயபானுவின் உதவியாளராக இருந்து கொண்டு,  ஒரு டெம்போ டிராவல் வாகனம்  மூலம்  கிராமங்களக்கு சென்று , அங்கு  வசிக்கும் பெண்களுக்கு தையல் பயிற்சி உள்ளிட்ட  பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறோம் எனக் கூறி அறக்கட்டளை அலுவலகத்திற்கு அழைத்து வந்து , பண முதலீட்டை திரட்டியவர்  என விசாரணையில் தெரியவந்தது. மேலும் விஜயபானு இதற்கு முன்பாக ஆந்திர மாநிலம் சித்தூரில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் கைதான போது ,  அவருடன் உதவியாளராக இருந்த இதே  சையத் முஹமூத் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அங்கு  ஜாமீனில் வெளியே வந்ததும் விஜயபானுவுடன் சேலத்தில் அறக்கட்டளை தொடங்கி ,  பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இன்று சையத் மஹமூத்தை  கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர் மேலும் விஜயபானு ,  ஜெயப்பிரதா, பாஸ்கர் மற்றும்  சையத் மஹமூத் ஆகியோர் எந்தெந்த வங்கிகளில் பண முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்தும் , முதலீட்டு பணத்தில்   சொத்துக்கள்  வாங்கி குவித்துள்ளனரா? என்பது குறித்தும் தற்போது ஆய்வு மேற்கொண்டு , விசாரணை நடத்தி  வருகின்றனர்.

மேலும் பொது மக்களிடமிருந்து பணம் வசூலித்து தரும் ஏஜென்ட்களாக செயல்பட்டவர்களையும் கண்டறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை மீது மேலும் 60 பேர் புகார்!

MUST READ