ஏடிஎம் மிஷினை கையால் உடைத்து திருட முயன்ற நபரின் சிசிடிவி காட்சிகள் பரவி வருகிறது.
அம்பத்தூர் ஒ.டி பேருந்து நிலையம் அருகே ‘எச்.டி.எப்.சி’ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வாளாகத்தில் உள்ளேயே, ஏ.டி.எம் ; சி.டி.எம் இயந்திரங்கள் உள்ளது.
இந்நிலையில், நவ.28 ஆம் தேதி நள்ளிரவு, 12.45 மணியளவில், ஏ.டி.எம்-க்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், இயந்திரத்தின் அடிப்பகுதியை கைகளால் உடைத்து, உள்ளே இருக்கும் பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், இயந்திரத்தின் அடிப்பகுதி கதவை உடைக்க முடியாததால், எமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.
இந்த கொள்ளை முயற்சியால் எழுந்த அலார்ம் மூலம், ஹரியானாவிலுள்ள தலைமை அலுவலத்திற்கு தெரிய வர, அவர்கள், கிளை மேலாளரான, மயிலாப்பூரைச் சேர்ந்த சுதாகர்(45), என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சுதாகர் கொடுத்த புகாரின்படி, வழக்கு பதிந்த போலீசார், விடியர் காலை 4மணியளவில், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், அரியலூரைச் சேர்ந்த மணிகண்டன்(20) என்பதும், புரசைவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. மணிகண்டனை கைது செய்த அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை தான் விஜய் என்னிடம் சொன்னார்….. ராஜ்குமார் பெரியசாமி பேட்டி!