Homeசெய்திகள்க்ரைம்4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் கைது

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் கைது

-

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பலே கல்யாண ராமன் கைதுகடந்த வாரம் புது மாப்பிள்ளை ஜோரில் திருமணம் செய்த காதலனை அவருடைய காதலி போலீஸில் சிக்க வைத்துள்ளார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவைச் சேர்ந்த நான்சி பிரியங்காவை கன்னியாகுமரி மாவட்டம் நெய்த மங்களம் பகுதியைச் சேர்ந்த லெஜின் என்பவரை மேட்ரிமோனி மூலம் பெண் வீட்டார் வரன் பார்த்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாம் தேதி அன்று வண்ணாரப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே கடலூரை சேர்ந்த முன்னாள் காதலி திருமணத்தில் தகராறு செய்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடலூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண் லெஜின் தன்னுடன் பழகி தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்திவிட்டு தன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் தகுந்த ஆதாரமில்லாததால் திருமணத்தை நிறுத்த இயலாமல் திருமணம் சுமூகமாக நடைபெற்றது. தடுக்க வந்த முன்னாள் காதலி பிரியதர்ஷணியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். சந்தேகமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில் பல பெண்களுடன் புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவர் என மாப்பிள்ளையின் புகைப்படத்தை  பார்த்து தெரியவந்ததை அடுத்து லஜின் மீது பல காவல் நிலையங்களில் புகார் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் மாப்பிள்ளையின் செல்போனில் பல பெண்களுடன் இன்ஸ்டாகிராமில் மற்றும் பேஸ்புக்கில் உரையாடல்கள் இருந்ததை பார்த்து உள்ளனர்.

இதுகுறித்து பெண் வீட்டார் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பெயரில் புது மாப்பிள்ளை லஜினை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!

MUST READ