திருவள்ளூர் அருகே செல்போன் டவரின் பேட்டரி திருடி விற்பனை செய்துவிட்டு திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடிய எலக்ட்ரீசியன் போலீசாரிடம் சிக்கி கைதானது எப்படி?.
திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் உள்ள ஏர்டெல் செல்போன் டவர் அமைந்துள்ளது.
அத்தகைய செல்போன் டவரில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டி எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அத்தகைய செல்போன் டவரில் இருந்து 1 லட்சம் மதிப்பிலான 24 பேட்டரிகள் திருடு போய்விட்டதாக ஏர்டெல் செல்போன் நிறுவனத்தின் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மேற்பார்வை செய்யும் அதன் மேலாளர் லோகநாதனிடம் எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டி தகவல் அளித்துள்ளார்.
அவரின் தகவலின் அடிப்படையில் லோகநாதன் செல்போன் டவரில் திருடு போன பகுதியில் ஆய்வு செய்த பின் எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டி உடன் சென்று அதன் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையமான கடம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஆனது அளித்திருந்தார்.
அவரின் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த இடத்திலிருந்து முக்கிய சாலையில் வழித்தடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகம் படும் வகையில் டாடா ஏசி வாகனம் ஒன்று நள்ளிரவில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கடந்து செல்வதை கண்ட போலீசார் கண்டறிந்தனர். அத்தகைய வாகன எண் வைத்து அதன் உரிமையாளரை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அன்றைய தினம் அந்த வாகனத்தை திருவள்ளூர் நேதாஜி சாலை டோல்கேட் பகுதியைச் சேர்ந்த தினகரன் இயக்கியது போலீசார் கண்டறிந்தனர். பின்னர் போலீசார் ஓட்டுனர் தினகரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏர்டெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டி திருடி இரும்பு கடைக்கு தனது வாகனத்தை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து எலக்ட்ரீசியன் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் செல்போன் டவரில் இருந்து பேட்டரிகள் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்தகைய 24 பேட்டரிகள் திருவள்ளூர் நேதாஜி சாலையில் உள்ள தர்மராஜ் பழைய இரும்பு கடையில் 50 ஆயிரத்திற்கு விலைக்கு போட்டு விற்று விட்டதாக அவர் கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தனது கட்டுப்பாட்டில் உள்ள செல்போன் டவரில் உள்ள பேட்டரிகளை திருடிவிட்டு திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடிய எலக்ட்ரீஷனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கடம்பத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.