Homeசெய்திகள்க்ரைம்அழகான பெண்கள் போட்டோ; பெண் குரலில் அழகாக பேசி பல வாலிபர்களை ஏமாற்றிய இளைஞர் கைது

அழகான பெண்கள் போட்டோ; பெண் குரலில் அழகாக பேசி பல வாலிபர்களை ஏமாற்றிய இளைஞர் கைது

-

- Advertisement -

வலைதளங்களில் ரீல்ஸ் செய்யும் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி, பெண் குரலில் பேசி சமூக வலைதளத்தில் ஆண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த வாலிபர் கைது


சமூக வலைதளத்தில் ஆபாசமாக ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டால் அதிக லைக்குகள் கிடைக்கும் எனவும் அதனால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும் பல பெண்கள் வீடியோக்கள் வெளியிடுகின்றனர். ஆனால் அது போன்று ரிலீஸ் வெளியிடும் பெண்கள் குறிவைத்து நூதன முறையில் சைபர் கிரைம் மோசடியில் வாலிபர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்து கொடுக்கும் வேலை செய்யும் பெண் ஒருவர் அண்ணா நகர் சைபர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். பாலியல் தொழில் செய்யும் பெண் என தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளம் மூலம் ஆண்களிடம் பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுவதாக புகார் தெரிவித்துள்ளார். தன்னைத் தெரிந்தவர்களில் சிலர் இது போன்று தன் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் பண மோசடி நடப்பதாக கூறியதை அடுத்து சம்பந்தப்பட்ட சமூக வலைதளத்தில் தன் ஆண் நண்பர் மூலமாக பேச்சு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

போலியாக உருவாக்கப்பட்ட அந்த சமூக வலைதள கணக்கை கையாளும் நபரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டபோது ஆபாசமாக புகைப்படம் அனுப்ப வேண்டும் என்றால் 500 ரூபாய் என்றும் வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என்றால் 1500 ரூபாயும் தனியாக அறையில் உல்லாசமாக இருக்க 3000 ரூபாயும் செலுத்தினால் வருவேன் என குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கு பணம் செலுத்துவதற்காக ஜி பே க்யூ ஆர் கோடை சமூக வலைதள மெசஞ்சர் மூலமாகவே அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை அடிப்படையாக வைத்து சென்னை அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலி சமூக வலைதளக் கணக்கை உருவாக்க பயன்படுத்தப்பட்ட ஜிமெயில் யார் பயன்படுத்துவது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். அதன் மூலம் கிடைக்கப் பெற்ற செல்போன் எண்ணும் , ஜிபே க்யூ ஆர் கோடு பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் என்னும் ஒன்று என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை எடுத்து இந்த செல்போன் என்னை வைத்து சைபர் கிரைம் போலீசார் போலி சமூக வலைதளக் கணக்கை வைத்து மோசடி செய்யும் நபரை தேடியுள்ளனர் விழுப்புரம் மரக்காணம் பகுதியில் செல்போன் நெட்வொர்க் மூலம் வாலிபர் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் 26 வயதுடைய கிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளது. பள்ளிப்படிப்பைக் கூட முழுதும் முடிக்காத கிருஷ்ணன் ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார் அதன் பின்பு பாண்டிச்சேரியில் தனியார் தங்க நகை கடையில் விற்பனை பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார்.

கிருஷ்ணனை அழைத்து போலிசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. குறிப்பாக கிருஷ்ணனின் செல்போனை ஆய்வு செய்வதில் பல பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போலி ஐடி களை உருவாக்கி பல ஆண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆண்கள் தன் சமூக வலைதள பக்கத்தை மெசஞ்சர் மூலமாக அணுக வேண்டும் என்பதற்காக, சமூக வலைதளங்களில் ஆபாசமாக ரீல்ஸ் வெளியிடும் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி சமூக வலைதளக் கணக்கை உருவாக்கி மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தன்னை மெசஞ்சர் மூலமாக அணுகும் ஆண்களிடம் ஆபாசமாக போட்டோ அனுப்பவும், வீடியோ காலில் நிர்வாணமாக வரவும், உல்லாசமாக இருக்கவும் 500 முதல் 3000 ரூபாய் வரை ஜிபி மூலம் பணம் செலுத்தினால் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு பணத்தை அனுப்பிய பிறகு தொடர்பு கொண்ட ஆண்களின் எண்களை பிளாக் செய்து விட்டு அடுத்த ஆணை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சமூக வலைதளம் மூலம் மெசஞ்சரில் பேசும் ஆண்கள் சந்தேகம் ஏற்பட்டு போன் பேச நினைக்கும் பொழுது, 85 ரூபாய் செலவில் கேர்ள்ஸ் வாய்ஸ் சேஞ்சர் என்ற செயலியை பயன்படுத்தி பெண் குரலில் ஆண்களிடம் பேசி ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக தனது புகைப்படம் மற்றும் குரலை கேட்டு கடந்த இரண்டு வருடமாக பல ஆண்கள் ஏமாந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக ஏமாற்றி இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தை ஏமாற்றி உல்லாசமாக செலவிட்டதாக தெரிவித்துள்ளார். பகலில் தனியார் தங்க நகை கடன் விற்பனை பிரதிநிதியாகவும் மற்ற நேரங்களில் இதுபோன்று சமூக வலைதளம் மூலம் மோசடி செய்து பணத்தை சம்பாதித்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கிருஷ்ணன் பயன்படுத்திய போலி சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்தபோது ஆபாசமாக ரில்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி போலி ஐடி களை உருவாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலிசார் விசாரணைக்கு பிறக்ய் கிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் .

பாதிக்கப்பட்ட பெண்ணே பயப்படாமல் மோசடி செய்யும் வாலிபரை காவல்துறையிடம் புகார் அளித்து கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

MUST READ