கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரவு 8 மணியளவில் பைக் டாக்சி டிரைவர் புக் செய்துள்ளார். நீண்ட நேரம் பைக் டாக்சி வராததால் சவாரியை ரத்து செய்திருக்கிறார்.
பயணத்தை ரத்துசெய்த பிறகு, பைக் டிரைவரிடமிருந்து மருத்துவருக்கு குறைந்தது 17 அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது, அதில் “மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று மிரட்டி உள்ளார். கூடுதலாக, டிரைவர் வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோக்களை அனுப்பியதாக பெண் மருத்துவர் புகார் அளித்ததாக போலீஸ் தரபில் கூறப்படுகிறது.
அந்த பெண் மருத்துவர் பூர்பா ஜாதவ்பூர் காவல் நிலையத்தில் போலீஸ் கமிஷனர் மற்றும் இணை கமிஷனர் குற்றப்பிரிவில் மின் புகார் அளித்து அதனைத் தொடர்நது சைபர் செல்லுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து பெண் மருத்துவர் புகாரளித்த சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
நெல்லூரில் கொலை செய்து மீஞ்சூர் ரயில் நிலையத்தில் சடலத்தை விட்டு சென்றவர் கைது.