Homeசெய்திகள்க்ரைம்15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைது

-

- Advertisement -

மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு காவல்நிலையத்தில் விசாரணை15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைதுமதுரையை சேர்ந்த எம்.எஸ்.ஷா. பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மதுரை திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் மீது 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் தந்தை, மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மகளின் செல்போனுக்கு, பாஜக நிர்வாகி ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்துள்ளதாகவும், இதையடுத்து தனது மகளிடம் கேட்டபோது, தனது மனைவி, மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் அடிக்கடி தனியார் விடுதிகளுக்கு  அழைத்துச் சென்று, பாஜக நிர்வாகி தனியாக இருந்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைதுசிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மீதும், சிறுமியின் தாய் மீதும் போக்சோ சிறப்பு சட்டம்  கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.இதில் உண்மையில்லை என போலீசார் விசாரணையில் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் ஏற்கனவே தந்தை அளித்த புகாரில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது எம்.எஸ்.ஷா சிறுமியுடன் பேசிய உரையாடல் ஆதாரங்கள் கிடைத்ததின் அடிப்படையில் எம்.எஸ்.ஷாவை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் காவல்நிலையத்தில் விசாரித்து வருகிறார்கள்.

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

MUST READ