Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!

சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!

-

சென்னை இராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்.

சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…!சென்னை இராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ச் தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ப நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரான்ஸ் தூதரகத்தின் அலுவலக விசா அதிகாரியான பெமிலா டுபேக் என்பவருக்கு   மின்னஞ்சல் மூலமாக மர்ம  நபர் ஒருவரால்  வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதை கண்டறிந்த உடன் பிரான்ஸ் தூதரகத்தின் செக்யூரிட்டி ஆபீஸர் சுதீப் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து செக்யூரிட்டி ஆபிஸர் சுதீப் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.

பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு…காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மோசடி…!

இந்நிலையில் மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் தலைமையில் பிரான்ஸ் தூதரகத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனைகள் ஈடுபட்டனர் இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியென தெரிய வந்துள்ளது.

மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் சமீப நாட்களாகவே பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வணிக வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் என தொடர்ந்து வரக்கூடிய நிலையில் தற்போது பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ