Homeசெய்திகள்க்ரைம்டம்பளர் மூலம் லஞ்சம் - ஊழியர் கைது

டம்பளர் மூலம் லஞ்சம் – ஊழியர் கைது

-

ஆவடி அடுத்த அம்பத்தூரில் கூட்டுறவு சங்க செயலாளர் ஆறுமுகம் விவசாயிடம் 40,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைதுசெய்து விசாரணை.

டம்பளர் மூலம் லஞ்சம் - ஊழியர் கைதுதிருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவர் சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் செக்யூரிட்டி காலனி பழைய பேங்க் ஆஃப் பரோடா சாலையில் அமைந்துள்ள வெங்கடாபுரம் கூட்டுறவு சங்கத்திற்கு லோன் வாங்குவதற்காக சென்று உள்ளார்.

அப்போது அந்த சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தியிடம் லோன் வழங்குவதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாய கிருஷ்ணமூர்த்தி திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

டம்பளர் மூலம் லஞ்சம் - ஊழியர் கைதுஅதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டினை செயலாளர் ஆறுமுகம் விவசாயி கிருஷ்ணமூர்த்தி இடம் இருந்து டம்பளர் மூலமாக பெற்றதாக தெரிகிறது. அப்போது அவர் கையும் காலமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ