Homeசெய்திகள்க்ரைம்மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் - கைது

மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் – கைது

-

- Advertisement -

டிரேடிங் பிஸ்னஸ் பணமோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து உடந்தையாக செயல்பட்ட வடமாநில சகோதரர்கள் இருவரை கைது செய்து சிறையிலடைத்த பெரம்பலூர் சைபர்கிரைம் போலீஸார்.மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் - கைதுபெரம்பலூர் மாவட்டத்தில் தொடரும் ஆன்லைன் மோசடி, மோசடி கும்பலிடம் சிக்கி லட்சகணக்கில் பணத்தை இழந்து விட்டதாக அரசு உயரதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள்  போன்றோரும் விதிவிலக்கல்ல. டிரேடிங் செய்து அதிக பணம் ஈட்டலாம்  என இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் ஆசைவார்த்தையை நம்பி படிப்படியாக ரூபாய் 64 லட்சத்தை  இழந்து விட்டதாக பெண் வேளாண் உதவி இயக்குநர் பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார்.

பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் கமிஷனுக்கு ஆசைப்பட்டு பல்வேறு வங்கிகளில்,  வங்கிக் கணக்கு தொடங்கி டிரேடிங் மோசடி கும்பலுக்கு உதவி வந்துள்ள  குஜராத் மாநிலத்தை சேர்ந்த அண்ணன், தம்பி (சகோதரர்கள்) இருவரை கைது செய்து சிறையிலடைத்த பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸார்.

ராஜஸ்த்தானை சேர்ந்த டிரேடிங் மோசடி கும்பல் சிக்கியது.டிரேடிங் மூலம் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம். டாஸ்க் செய்து பணம் ஈட்டலாம். குறைந்தவிட்டியில் கடனுதவி, மற்றும் தங்களுக்குபரிசுப் பொருள் விழுந்துள்ளது இப்படி மொபைலில் வரும் வாட்ஸப் இன்ஸ்டாகிராம் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பணத்தின் மீது ஆசைப்பட்டு மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழப்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

செல்போனில் OTP- எண் கேட்போரிடம் தவறுதலாக OTP எண்ணை கொடுத்து வெறும் அப்பாவி மக்கள் மட்டுமேமோசடி கும்பலிடம் ஏமாந்து வந்த நிலையில்  தற்போது சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ள அரசு அலுவலர்கள். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், கணவன் மனைவி என இரட்டை சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் மற்றும் உயர்பதவி வகிக்கும் பொறியாளர்கள் (AE) போன்றோரும் இது போன்ற மோசடி கும்பலிடம் சிக்கிபல லட்ச ரூபாய்களை இழந்து வருவது தான் வேடிக்கையாக உள்ளது.

பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராணி (38) (வேளாண் உதவி இயக்குநர்) இவர் தன்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்ட மர்மநபர் ராடிரேடிங் மூலம் அதிக பணம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி வெவ்வேறு வங்கி கணக்குகள் வாயிலாக தன்னிடம்  63 லட்சத்து 87 ஆயிரத்து 620 ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக தன்னிடமிருந்த ஆதாரங்களுடன் பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸாரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ஜூலை 2 – ஆம் தேதி  அன்று வழக்கு பதிவு செய்துள்ளனர் . மேலும் இது தொடர்பாக செல்வராணியின் வங்கி பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில் டிரேடிங் கும்பலின் கணக்குகள் அனைத்தும் வடமாநில வங்கி கணக்குகளாக இருந்துள்ளது. இந்நிலையில் அந்த வங்கிக் கணக்குகளில் உரிமையாளர்  ஒருவரது ஆதார் மற்றும்  E.Mail முகவரி போலீஸாருக்கு கிடைத்துள்ளது.மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட சகோதரர்கள் - கைதுஇதையடுத்து பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆதரஷ்பசேரா உத்தரவின் பேரில்  7 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் கடந்த 18 ஆம் தேதி குஜராத் மாநிலம் விரைந்துள்ளனர். அங்கு சென்ற போலீஸார் வடோதரா மாவட்டத்திலுள்ள  மேற்படி முகவரியை தேடியதில் ரதன்பூர் என்ற இடத்தில் பூஜா கேட்டரிங் என்ற பெயரில் உணவக தொழில் செய்து வந்த ஷர்மா பன்ஸிலால் என்ற நபரை பிடித்து விசாரணை செய்கின்றனர். விசாரணையில் தொழில் ரீதியாக  GST யுடன் கூடிய தனது நடப்பு வங்கிக்கணக்கை (SBI) ஒரு லட்ச ரூபாய் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனது தம்பியிடம் கொடுத்ததாக பன்ஸிலால் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவனை அழைத்து கொண்டு கபராய் ஜங்ஷன் பகுதிக்கு சென்ற தனிப்படை போலீஸார் அங்கு குஷ்பு ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த பன்ஸிலாலின் தம்பி ஷர்மா சுனில்குமார் என்பவனை  பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் ராஜஸ்த்தான் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட சகோதரர் களான இவர்கள் இருவரும் ராஜஸ்தானை  சேர்ந்த டிரேடிங் மோசடி கும்பலுக்கு தங்கள் பெயரில் சுமார் 7 வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்கி கொடுத்து அதன் மூலம் பல்வேறு நபர்களிடமிருந்து இதுவரை 18 லட்சம் வரை முறைகேடாக பணம் பெற்றுத்தந்துள்ளனா் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த தனிப்படையினர் குஜராத்  மாநில போலீஸாரின் உதவியுடன் கடந்த 22 ஆம் தேதி வடோதரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்கிருந்து நேற்று பெரம்பலூர் அழைத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள் மீது ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் மோசடி செய்தது என்ற இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார். அவர்களிடமிருந்து ரூபாய் 50 ஆயிரம் ரொக்கபணம், மோசடிக்கு பயன்படுத்தி வந்த 4 செல்போன்கள், 7 ATM அட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் இருவரையும் வேப்பந்தட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பருவதராஜ் ஆறுமுகத்திடம் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதனிடையே பொதுமக்கள் ஆன்லைன் மோசமாளில் சிக்கி இழந்தை பணத்தை மீட்டெடுக்க  முறைகேடாக பணத்தை  இழந்து விட்ட 24 மணி நேரத்திற்குள 1930 என்ற எண்ணில் புகார் தெரிவித்தும் www.cybercrime.gov.in என்ற இணைய தளமுகவரியில் புகார் பதிவு செய்வதும் அவசியம் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா அறிவுறுத்தியுள்ளார்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்பதற்கேற்ப பணத்தின் மீது உள்ள மோகத்தால் நன்கு  படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்திலுள்ள நபர்களே முகம் தெரியாத நபர்களிகளின் ஆசைவார்த் தைகளுக்கு மயங்கி பணத்தை இழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மோசடிக்கு அடிப்படையான  வங்கி கணக்குகளை கமிஷனுக்கு ஆசைப்பட்டு முறைகேடாக பயன்படுத்துவோரை கண்காணித்து தடுத்திடும் நோக்கில்  தமிழ்நாடு அரசுகடந்த சில நாட்களுக்கு முன்ஆப்ரேஷன் திரை விலக்கு என்ற பெயரின் தமிழகம் முழுதுவதும் வங்கி கணக்குகளை சரிபார்த்து முறைகேடு செய்துள்ளவர்களை கண்டறியும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது குறிப்பிட தக்கது. எனவே பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு அவசியம் என்கின்றனர் சைபர் கிரைம் போலீஸார்.

குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்த பெண்ணிடம் இளைஞர்கள் அத்துமீறல் –  மூன்று பேர் கைது

MUST READ