Homeசெய்திகள்க்ரைம்கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி

-

கிரெடிட் கார்டு மூலம் இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி. ராயப்பேட்டை போலீசார் விசாரணை.

சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் டிரைவர் சீனிவாசன்.

ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டர் எதிரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் தன்னுடைய இருசக்கர வாகனத்துக்கு கிரெடிட் கார்டு மூலம் ரூ. 300 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார்.

பிறகு வீட்டுக்கு வந்து பார்த்தபோது பத்தாயிரம் ரூபாய் வீதம் 13 முறையும் 4000 ரூபாய் விதம் இரண்டு முறையும் என மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டிருந்தது.

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமியாரை கழுத்தை நெரித்து கொலை – மூவர் கைது

அதிர்ச்சியடைத்த சீனிவாசன் இது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடிகிரெடிட் கார்டு மோசடி கும்பல் கைவரிசையா? அல்லது கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் போது, பின் நம்பரை தெரிந்து கொண்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கைவரிசை காட்டினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

MUST READ