Homeசெய்திகள்க்ரைம்சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு

சம்போ செந்தில் மற்றும் ஈசா, எலி யுவராஜு உட்பட 13 பேர் மீது வழக்கு

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூர் தெற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் வயது 36. கட்டிட ஒப்பந்த பணிகள் மற்றும் சாலை ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். மிரட்டி பணம் பறித்தல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சரவணன், மொட்டை கிருஷ்ணன், இலியாஸ் மற்றும் மாலி சரவணன், ஆகியோர் சம்பவம் செந்தில் பெயரைச் சொல்லி இவரிடம் அடிக்கடி மாமூல் வாங்கிச் சென்றாக கூறப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மெட்டல் பாக்ஸ் கம்பெனி பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்து வேலை செய்து கொண்டிருந்தபோது,  வழக்கறிஞர்களான சரவணன், மொட்டை கிருஷ்ணன், சிவகுருநாதன், ஆகியோர் தன்னிடம் வந்து பிரபல ரவுடியான சம்பவம் செந்தில் மாமூல் வாங்கி வரச் சொன்னதாக கூறி தன்னிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாக புது வண்ணாரப்பேட்டை போலீசில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

ஈசா, எலி யுவராஜும் ஒப்பந்தக்காரரை மிரட்டி மாமூல் வசூல்மேலும் வழக்கறிஞர் சரவணன் செல்போனை தன்னிடம் கொடுத்து பேசச் சொன்னதாகவும், அதை வாங்கி பேசியபோது எதிர் முனையில் பேசியவர் நான் சம்போ@ சம்பவம் செந்தில் பேசுகிறேன் என்னுடைய ஏரியாவில் காண்ட்ராக்ட் வேலை பார்த்தால் எனக்கு 20 லட்சம் ரூபாய் மாமுல் கொடுத்து ஆகணும் என்று கூறியதாகவும், தான் அவ்வாறு பணம் கொடுக்க முடியாது என்று கூறவே எதிர் முனையில் பேசிய சம்பவம் செந்தில் நீ மாதம் எனக்கு ஒரு லட்ச ரூபாய் ஒழுங்காக மாமுல் கொடுத்து விடு.

இல்லையென்றால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என்று மிரட்டியதாகவும், தனக்குத் தெரியாமல் சென்னையில் எங்கும் தொழில் செய்ய முடியாது. எல்லா இடத்திலேயும் எனது சார்பில் பல பேர் எனக்காக மாமூல் வாங்கிட்டு இருக்காங்க என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. உயிர் பயத்தில் மாமூல் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும்

வழக்கறிஞர்கள் சரவணன், சிவகுருநாதன், மற்றும் மொட்ட கிருஷ்ணா ஆகியோர் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை மாதம் மாதம் ரூபாய் ஒரு லட்சம் பணத்தை வாங்கிச் சென்றதாகவும் அதன் பிறகும் தொடர்ந்து மேற்படி வழக்கறிஞர் சரவணன், சிவகுருநாதன், மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தன்னிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்த நிலையில்

வ உ சி நகரச் சேர்ந்த சிட்டிசன், அருண்  முனுசாமி, வசந்த், தமிழ் ஆகியோரும் தன்னிடம் வந்து VOC நகரைச் சார்ந்த சிறையில் இருக்கும் ஈசாவும், எலி யுவராஜும் மாமுல் கேட்டதாக தன்னிடம் வந்து பணம் கேட்டபோது தான் பணம் இல்லை என்று கூறியதையடுத்து நீ சம்போ செந்திலுக்கு மட்டும்தான் மாமூல் கொடுப்பாயா என மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஈசா, எலி யுவராஜும் ஒப்பந்தக்காரரை மிரட்டி மாமூல் வசூல்ஈசா, எலியுவராஜுக்கு மாமூல் கொடுக்கவில்லை என்றால் தன்னை வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து  பயந்து போய் இரண்டு முறை தலா 25,000 மாமூலாக பணம் கொடுத்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேற்படி நபர்களுக்கு பயந்து தான் அப்போது புகார் அளிக்கவில்லை எனவும்,

திருவொற்றியூர் பகுதியில் தற்போது வேறொரு ஒப்பந்த பணி செய்து வரும் நிலையில் மீண்டும் மாமூல் கேட்டு மிரட்டி வருவதாகவும் தன்னை போல் இனி யாரும் பாதிக்கப்பட கூடாது என்ற எண்ணத்தில் தற்போது போலீசில் புகார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதன் பேரில் புது வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவம் செந்தில் வழக்கறிஞர்கள் சரவணன், மொட்டைகிருஷ்ணன் இலியாஸ் சிவகுருநாதன் ரவுடி கும்பலை சேர்ந்த ஈசா, எலி யுவராஜ் ,சிட்டிசன் அருண் , எண்ணூர் முனுசாமி வசந்த் ,தமிழ் ,மாலி சரவணன் ஆகிய 13 பேர் மீது மிரட்டல் மிரட்டி பணம் பறித்தல் ஆபாசமாக பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ