Homeசெய்திகள்க்ரைம்சென்னையின் பிரபல Star Hotel மேற்கு வங்க ஊழியர் கைது...நடந்தது என்ன?

சென்னையின் பிரபல Star Hotel மேற்கு வங்க ஊழியர் கைது…நடந்தது என்ன?

-

சென்னையின் பிரபல Star Hotel ஒன்றில் பணி புரியும்  மேற்கு வங்க ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணனின் காதலியை கொன்றுவிட்டு அப்பாவி போல் சென்னையில் பதுங்கி ஓட்டலில் வேலை செய்த மேற்கு வங்க இளைஞரை சென்னை போலீஸார் கைது செய்து அம்மாநில போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சென்னையின் பிரபல Star Hotel  ஊழியர் கைது...நடந்தது என்ன?

மேற்கு வங்க மாநிலம் செல்போன் ஜல்பல்குரியை சேர்ந்தவர் அபிஷேக் தார்ஜி(27). சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமையலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அப்போது,திருமணமாகி தனியாக வசித்து வரும் இவரது அண்ணன் சந்தித்துள்ளார்.தான் ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருந்ததாகவும், தற்போது தொடர்பை விட்டு விட்ட நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நெருக்கடி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 7ம் தேதி சிலி குரி நகரம் பாக்தி நகர் காவல்நிலைய உட்பட்ட பகுதிக்கு அந்த பெண்ணை வரவழைத்து, அபிஷேக்கும் அவரது அண்ணனும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் அபிஷேக், சென்னை திரும்பி வழக்கம் போல நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பாக்தி நகர் போலீசார் , அபிஷேக்கின் அண்ணனை கைது செய்துள்ளனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னையில் பதுங்கி இருந்த அபிஷேக்கை பிடிக்க நேற்று இரவு மேற்குவங்க போலீசார் வந்தனர். மயிலாப்பூர் காவல்துறை ஆணையர் ஹரிகிரனை சந்தித்தனர்.

மயிலாப்பூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் பட்டினம்பாக்கம் போலீசார் மேற்குவங்க போலீசாருக்கு உதவியாக சென்று நட்சத்திர ஓட்டலில் பதங்களைக் இருந்த அபிஷேக்கை கைது செய்தனர். பின்னர் அவரை இன்று காலை மேற்கு வங்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

மக்களே உஷார்… ஒரே ஒரு போன் கால்: ரூ.10 கோடியை இழந்த முதியவர்

MUST READ