Homeசெய்திகள்க்ரைம்சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை - கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை – கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

-

திருப்பூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கூலி தொழிலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஈஸ்வரன் (35). இவர் தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்த மயில்களை விரட்ட செல்வது வழக்கம். கடந்தாண்டு மே மாதம் அதே பகுதியை சேர்ந்த 10 வயது, 8 வயதுடைய இரண்டு சிறுவர்களை ஈஸ்வரன் தனியாக அழைத்துச்சென்று அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் மகளிர் போலீசார் ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீதர்,  சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஈஸ்வரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதனை அடுத்து, போலிசார் ஈஸ்வரனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ