கோவை மாவட்டம் முட்டத்துவயல் கிராமத்தில் பழங்குடியின மக்ககளுக்கு வழங்க பட்ட இடத்தில் ஈசா யோக மையம் சார்பில் சட்டத்திற்கு புறம்பான மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஈசா யோக மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மின் தகன மேடையை ஆய்வு மேற்கொள்ள சென்ற முற்போக்கு அமைப்பினருக்கும் ஈஷா யோகா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மின் தகன மேடை சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டது என்று தந்தை பெரியார் திராவிட கழகம் மற்றும் முற்போக்கு கழகங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வு செய்யும்படி ஆணை பிறப்பித்ததுள்ளது.
அப்புகுதிக்கு சென்ற உண்மை கண்டறியும் குழு ஆனது ஆய்வு செய்ய சென்ற போது ஈசா யோக மையம் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பின்னர் மோதலாக மாறியது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலந்துறை போலீசார் இரு தரப்பினரையும் சமாதமான முறையில் அனுப்பி வைத்துள்ளனா்.