இந்திய கடலோர காவல்படை ராமேஸ்வரம் அருகே கடத்தப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை கடந்த 30 ஆம் தேதி ராமேஸ்வரத்தை அடுத்த தெற்கு உச்சிப்புளி கடற்கரைக்கு அப்பால் சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். இப்பகுதியில் கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைப் பிரிவு கடத்தல் தடுப்பு நடவடிக்கையை விரைவாக எடுத்தது. அதன் உளவுப்பிரிவு அப்பகுதியில் உடனடியாக விரிவான கண்காணிப்பை மேற்கொள்ள தனது ஏர் குஷன் வாகனத்தில் (ஏசிவி) சென்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, சுமார் 200 கிலோ (ஈர எடை) எடையுள்ள கடல் அட்டைகள் கொண்ட ஐந்து டிரம்களை கண்டுபிடித்து மீட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ. 80 லட்சம் ஆகும். இந்த வெற்றிகரமான நடவடிக்கை, கடத்தல் எதிர்ப்பு, சட்டவிரோத வேட்டை தடுப்பு மற்றும் கடல் பல்லுயிர் பாதுகாப்பில் இந்திய கடலோர காவல்படையின் நடவடிக்கையால் இந்த கடல் அட்டை கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்