Homeசெய்திகள்க்ரைம்கோவை இளைஞர் கொலை வழக்கு - 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை இளைஞர் கொலை வழக்கு – 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

-

கோவையில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கோவை இளைஞர் கொலை வழக்கு - 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ரத்தினபுரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ், கார்த்திக், மகேந்திரன், சுரேஷ், கவாஸ்கான், ஜெய்சிங், நவீன், கருப்பு கௌதம், விமல்குமார், விஜய், சைமன் கிறிஸ்டோபர், கௌதம் மற்றும் கலைவாணன் ஆகிய 14 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது ஜெய்சிங் உயிரிழந்தார். விஜய் என்பவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் நியமனம்

வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் நேற்று தீர்ப்பு வழங்கினார். வழக்கில் கருப்பு கௌதம் மற்றும் சைமன் கிறிஸ்டோபர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. விக்னேஷ் உட்பட இதர 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

MUST READ