Homeசெய்திகள்க்ரைம்மருத்துவ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றிய காங்கிரஸ் பிரமுகர் கைது

மருத்துவ சீட் வாங்கி தருவதாக ஏமாற்றிய காங்கிரஸ் பிரமுகர் கைது

-

சென்னை கேளம்பாக்கம் அடுத்த படூர், ஒ.எம்.ஆர் சாலையைச் சேர்ந்தவர் தீபா/44.இவரின் மூத்த மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி தருவதாக உறவினர் லதா வாயிலாக,அவரது தோழி அனிதா/48 என்பவரை கடந்த 2019 ல் அறிமுகம் செய்துள்ளார்.அனிதா தமிழக காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும்,ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகளை தெரியும் என்றும்,அதன் வாயிலாக மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.Congress leader arrested for cheating by claiming to buy medical seat.

அதை நம்பி அனிதாவுக்கும்,அவரது நண்பர் கோவாவைச் சேர்ந்த முகமது கான் என்பவருக்கும் கடந்த 2019 முதல் பல்வேறு தவணைகளாக 59 லட்சம் ரூபாய் தீபா கொடுத்துள்ளார்.ஆனால் பல நாட்களாகியும்,மருத்துவ சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.எனவே அனிதா மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவில் தீபா புகார் அளித்தார்.

இது குறித்து விசாரித்த வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம், சாந்தி புரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி அனிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முகமது கானை தேடி வருகின்றனர்.

MUST READ