Homeசெய்திகள்க்ரைம்அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்

-

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்அதிமுகவினர் வைத்த வெடியால் கண் பார்வை பாதிக்கப்பட்ட எஸ்.எஸ்.ஐ , மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீரர் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவெறும்பூர் அருகே கூத்தைப்பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்துள்ளது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக் செய்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அரசு கொறடாவுமான மனோகரன் ஆகியோர் வந்த பொழுது அவர்களை வரவேற்பதற்காகஅதிமுகவை சேர்ந்த ராஜா என்பவர் வெடி வைத்து உள்ளார். அவர் வைத்த வெடி வெடித்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெறும்பூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனின் வலது கண்ணில் அடிபட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி அவரை மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பரிந்துரைத்துள்ளனர்.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பட்டாசு வெடி; கண்ணில் பட்டு பார்வையிழந்த உதவி ஆய்வாளர்

இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சுப்பிரமணியனை மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு புதிய கட்டுப்பாடு!

இந்த நிலையில் இந்த விவகாரம் சம்பந்தமாக திருவெறும்பூர் போலீசார் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், ஒன்றிய அவைத்தலைவர் அண்ணாதுரை, வெடிவைத்த ராஜா,ராகவன், ரபீக் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் வெடிவைத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ராஜா (36) அதே பகுதியை சேர்ந்த ராகவன் (36) வடக்கு காட்டூரை சேர்ந்த முகமது ரபிக் ஆகிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

MUST READ