Homeசெய்திகள்க்ரைம்சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?

சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?

-

சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?சென்னை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பலர் கூண்டோடு இடமாற்றம்- காரணம் என்ன?

சென்னை விமான நிலையத்தில் பாஜக பிரமுகர் துணையுடன் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் காரணமா? இல்லையேல் வழக்கமான இடமாற்றங்களா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில், ரூ. 167 கோடி மதிப்புடைய, 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடந்ததாகவும், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து, இந்த கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்துபவர், கடையில் பணியாற்றும் ஊழியர்கள், இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணி உட்பட 9 பேரை, கடந்த ஜூன் மாதம் கடைசியில், சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது, இந்த கடத்தல் பின்னணியில் பாஜக பிரமுகர் ஒருவர் முக்கியமாக செயல்பட்டதாகவும், அவருடைய சிபாரிசின் பெயரில் இந்த பரிசு பொருட்கள் நடத்தும் கடைக்கு, இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியதாகவும், தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் கடத்தப்பட்ட 267 கிலோ தங்கத்தில், இன்னும் ஒரு கிலோ தங்கம் கூட கடத்தல்காரர்களிடம் இருந்து, சுங்கத்துறை மீட்கவில்லை. அதே நேரத்தில் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட பாஜக பிரமுகர் உட்பட்டோருக்கு சம்மன்கள் அனுப்பி, சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள நிதி அமைச்சக உயர் மட்ட அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மற்றும் சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளை, டெல்லிக்கு இரண்டு முறை வரவழைத்து, முக்கிய ஆலோசனைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில், ஏர் இன்டெலிஜென்ட் பிரிவினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், அவர்களின் செயல்பாடுகள் முழு தோல்வியில் முடிந்துள்ளது என்றும் கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சகம் அதிரடியாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை உயர் அதிகாரிகள் 5 பேரை கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளது.

சென்னை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையில் முதன்மை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர்கள் இருவர்,ஆகிய ஐந்து பேர்கள் அதிரடியாக இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னை சுங்கத்துறையில் உள்ள துணை ஆணையரர்கள், உதவி ஆணையர்கள் 7 பேரை அதிரடியாக, டெல்லி, மும்பை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் என்று பல்வேறு இடங்களுக்கு இடமாற்றமும் செய்துள்ளனர்.

மேலும் இது முதல் பட்டியல் தான் என்றும், அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் பட்டியல் வர இருக்கிறது எனவும் அப்போது மேலும் சில உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் நடந்த, 267 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்வதிலும், அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கூண்டோடு கைது செய்வதிலும், அதற்கு துணையாக இருந்தவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், உயர் மட்ட அதிகாரிகள் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த இடமாற்றங்கள் குறித்து விசாரித்த போது, இது வழக்கமாக நடக்கும் இடமாற்றங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் இந்த இடமாற்றம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருந்ததால், இப்போது தாமதமாக இடமாற்றங்கள் நடந்துள்ளன என்று ஒரு தரப்பிலும், மற்றொரு தரப்பில், தங்கம், போதை பொருட்கள் கடத்தல் சமீப காலமாக, சென்னை விமான நிலையத்தில் அதிகரித்து வருகின்றன. இவைகளை கண்காணிக்க வேண்டிய ஏர் இன்டலிஜென்ட் பிரிவு, முறையாக செயல்படவில்லை.

40 இடங்களில் அரிவாள் வெட்டு –  வழக்கறிஞர் கொடூர கொலை

உண்மையான கடத்தல் கோஷ்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், சாதாரண பயணிகளை சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் நிறுத்தி வைத்து அலைக்களிப்பதாக கூறப்படுகிறது. அதோடு 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இதுவரையில் அந்த கடத்தல் தங்கம் ஒரு கிலோ கூட, பறிமுதல் செய்யப்படவில்லை. அதோடு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சிலர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனவேதான் ஒன்றிய நிதி அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

MUST READ