இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி மூலம் பல கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச இளைஞர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது.
கோவையை சேர்ந்த ஜார்ஜ் (75) என்பவர் மீது மும்பையில் வழக்கு உள்ளதாக கூறி ரூ.77 லட்சம் மோசடியாக பறித்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் சர்மா (23), முகுல் சந்தல் (24), அனில் ஜாதவ் (25) ஆகிய மூவரை கோவை சைபர் கிரைம் தனிப்படை போலீஸார் கடந்த 4 ஆம் தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 12 மாநிலங்களில் 52 சைபர் கிரைம் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்களின் பெயர்களில் சுமார் 700 வங்கி கணக்குகளை உருவாக்கியும், 100க்கும் மேற்பட்ட யு.பி.ஐ ஐடிகள் மூலம் இரண்டு நாட்களில் ரூ.2.25 கோடி பண பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் ஆன் லைன் ஆப்புகள் மூலம் 1000த்திற்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.
ரூ.50 கோடி நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் தலைமறைவு
இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட ரவிக்குமார் சர்மா (23), முகுல் சந்தல் (24), அனில் ஜாதவ் (25) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.