Homeசெய்திகள்க்ரைம்விசாரணைக் கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை

விசாரணைக் கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை

-

வேலூரில் விசாரணைக் கைதி மரண வழக்கில், காவல் ஆய்வாளர் முரளிதரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் கைதி மரணம் – காவல் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை2013ல் கள்ளச்சாராய வழக்கில், கைது செய்யப்பட்ட கோபி என்பவர் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது உயிரிழந்தார். இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று (ஜூலை 22) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் காவல் ஆய்வாளர் முரளிதரன், எஸ்.எஸ்.ஐ. உமா சங்கர் மற்றும் எஸ்.எஸ்.ஐ., இன்பரசன் ஆகிய 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

MUST READ