Homeசெய்திகள்க்ரைம்அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைது

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைது

-

- Advertisement -

அதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல்; மற்றொரு பெண் நிர்வாகி கைதுஅதிமுக மகளிர் அணி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு பெண் நிர்வாகி கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் கோகிலா(39), அதிமுக மகளிர் அணி பகுதி செயலாளர்.

பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக முன்னாள் மாவட்ட பிரதிநிதியும் பிரபல ரவுடியுமான ஜான் கென்னடியின் மனைவி கோகிலா ஆவார்.

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அதிமுக கட்சியின் whatsapp குரூப்புகளில் கோகிலாவின நடத்தையைப் பற்றி அவதூறு பரப்பியதுடன், அவரது சங்கை அறுக்காமல் விடக்கூடாது என புதுப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக மகளிர் அணி 63வது வட்டச் செயலாளர் வாணி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக கோகிலா ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆப்பிள் பெட்டிகள் திருட்டு – சிசிடிவியால் திருடியவர் கைது

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இன்று வாணியை கைது செய்துள்ளனர்.

அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் அவதூறாக விமர்சித்து கொள்வது அக்கட்சியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

MUST READ