திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் ஜென்-பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்றைய தினம் ஷோபனா,சுகந்தி,பார்த்தசாரதி, புஷ்கர் என 4 தொழிலாளர் வழக்கமாக பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். தற்போது தீ விபத்தில் மேலும் ஒருவர் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கையானது மூன்றில் இருந்து நான்காக அதிகரித்துள்ளது.
அதில் ஷோபனா என்ற பெண் தொழிலாளி மட்டும் லேசான தீ உருவான போதே உயிருடன் தப்பி வெளியே வந்திருந்தார்.மேலும் பணியில் இருந்த மூன்று தொழிலாளர்கள் நிலை என்ன என்று தெரியாமல் இருந்து வந்தது.
தீயணைப்பு துறையினர் தீ முழுவதும் அணைக்கப்பட்ட பின்னர் கட்டிடம் முழுவதும் ஆய்வு செய்ததில் இரண்டு உடல்களை இரவு கருகிய எலும்பு கூடாக இடிபாடுகளில் இருந்து போலீசார் கண்டெடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நேரம் ஆனதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.தொடர்ந்து இன்று காலை மீண்டும் 7:30 மணியளவில் மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வந்தது.அப்போது மேலும் ஒரு உடல் கருகிய நிலையில் போலீசார் கண்டெடுத்தனர்.
அதற்கு முன்பாக நேற்றைய தினம் தொழிற்சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் தொழிற்சாலை ஊழியர் சீனிவாசன் மீது ஆலையில் பற்றிய தீயால் பாய்லர் வெடித்து சிதறியதில் அவர் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் தீ விபத்து பலி எண்ணிக்கை மூன்றில் இருந்து நான்காக உயர்ந்துள்ளது.
மூவர் உடல் கருகிய எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் அது ஆனா பெண்ணா அவர்கள் யார் என்பது குறித்து கண்டறிய சிக்கல் ஏற்பட்டு இருப்பதால்
அவர்களுடைய உறவினர்கள் டி என் ஏ பரிசோதனை மேற்கொண்ட பிறகே
உடல்கள் அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.