Homeசெய்திகள்க்ரைம்கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!

-

கடன் பிரச்சனை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி!கடன் பிரச்சனை காரணமாக கும்பகோணம் நாதன் நகரை சேர்ந்த சங்கரன் லிங்கம் மற்றும் இவரது சகோதர, சகோதரிகள் ,மனைவி ஆகிய நான்கு நபர்கள் விஷம் குடித்துள்ளனர். இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கும்பகோணம் நாதன் நகரைச் சேர்ந்த சங்கரலிங்கம் (35), கமலக்கண்ணன் என்பவரிடம் நாலு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் யும், கோபி என்பவரிடம் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கடன் பெற்றுள்ளார்.

இந்த கடன் தொகையை அடைத்த பின்னும் மேலும் வட்டி தர வேண்டும் என தொல்லை படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் இருந்து ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனந்திற்கு இரண்டு லட்ச ரூபாய் கடன் தொகை கட்டிய பின்னும் மேலும் 4 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என ஆனந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது .

இந்த கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் , இவரது சகோதரர் ராஜ்குமார், இவரது சகோதரி சரஸ்வதி, சங்கரலிங்கத்தின் மனைவி பிரமிளா மேரி ஆகிய நால்வரும் இன்று அதிகாலை தனது வீட்டில் விஷம் (எலி பேஸ்ட்) அருந்தியுள்ளனர். மயங்கிய நிலையில் இவர்களை கண்ட அக்கம் பக்கத்தினர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

கடன் சுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் தொடர்பாக கும்பகோணம் நகர மேற்கு காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘மழையில் நனைகிறேன்’ படக்குழுவினரை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

MUST READ