Homeசெய்திகள்க்ரைம்முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த தீபா...

முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த தீபா கைது

-

அர்ஜுன் என்பவருடன் 2015ல் திருமணம் ஆகி உள்ளது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா். அடுத்ததாக கோபாலகிருஷ்ணன் என்பவரை ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார். அடுத்த நபர் ஆன ஹரியை ஜாதி மேட்ரிமோனி மூலமாக திருமணம் செய்துள்ளாா்.முதல் கணவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்துள்ளாா்.மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த - தீபா கைதுசென்னையை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்த நிஷாந்தி எனும் பெண்ணிடம் 13ம் தேதி அரசு உதவி மற்றும் மாதம் ஆயிரம் பணம் பெற்றுத் தருவதாக கூறி தி.நகருக்கு அழைத்து சென்ற நிலையில் தாய் ஏமாந்த நேரத்தில் குழந்தையுடன் ஆட்டோ மாரி மாரி திருவேற்காடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என உள்நோயாளியாக சேர்ந்தார் அங்கிருந்து கணவருக்கு ஹரிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் அளித்தார் அங்கு வந்த கணவர் பார்த்தபோது இங்குபேட்டரில் குழந்தை உள்ளது என காட்டி அவரை உற்சாகப்படுத்தினார் இந்த நிலையில் மறுநாள் மருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்யாமலேயே கணவருடன் காரில் தீபா வீட்டுக்கு சென்று விட்டார் .

இந்த நிலையில் வீட்டில் இருக்கும்போது மருத்துவமனையில் இருந்து செல்போன் மூலமாக மருத்துவர்கள் அழைத்துள்ளனர். இதனால் கணவர் சந்தேகத்துடன் கேள்வி கேட்க தீபா குழந்தையும் போட்டுவிட்டு கணவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் இரவு கிளம்பிச் சென்று விட்டார் இந்த நிலையில் போலீஸாரும் ஒரு புறம் தேட அந்த மருத்துவமனை நிர்வாகமும் அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் அளிக்க அவர்கள் தெரிவித்ததன் பேரில் ஹரி குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் இந்த நிலையில் கண்ணகி நகர் போலீசார் நேரே சென்று குழந்தையை பெற்று அதை தாய் நிஷாந்தியிடம் உரிய முறையில் ஒப்படைத்தனர்,

அடுத்ததாக தீபாவை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கண்ணகி நகர் போலீசார் கணவர் ஹரி இடம் முதல் விசாரணையை துவக்கினார்கள் ஹரி கொடுத்த தகவலின் பெயரில் தீபாவின் செல்போன் ஹரியிடம் இருந்ததால் அந்த போனின் உதவியுன் தீபா சென்ற இடங்களை சிசிடிவி, ஆட்டோ என தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடிய போது தீபா சிக்க வில்லை .

மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த - தீபா கைது

இதனால் தொடர்ச்சியாக தீபாவை படிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள் இந்த நிலையில் திடீரென அந்த செல்போன்னுக்கு ஒரு மெசேஜ் கிடைத்துள்ளது அந்த மெசேஜை படித்த கண்ணகி நகர் ஆய்வாளர் சிதம்பரத்தில் உள்ள செல் சிட்டி எனும் கடையில் புதிய செல்போன் மற்றும் சிம்கார்டு வாங்கி பயன் படுத்தியது தெரிந்து அந்த போனை சைபர் கிரைம் மூலமாக லொகேஷன் செய்துள்ளனர் அந்த போன் ஈரோடு அருகே பரமத்திவேலுர் பகுதியில் இருததால் அங்கு தீபாவை வளைத்து பிடித்தனர்,

அப்போது தீபாவை முழுமையாக விசாரித்த போது தீபா இதுவரை மூன்று திருமணங்கள் செய்து ஏமாற்று பேர்விழி என்றும் கடைசியாக வாழ்ந்து வரும் ஹரி என்பவர் தனியார் மேட்ரிமோனி மூலமாக திருமணம் செய்து அவரிடம் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி குழந்தை பிறந்துள்ளதாக அவரை ஏமாற்றி உள்ளார்.

இதனை அடுத்து மேலும் விசாரித்த போது தீபாவின் பூர்வீகம் கிண்டி அடையாறு பகுதி எனவும் இவர் ப்ளஸ் டூ வரை படித்து லெதர் கம்பெனியில் பணியாற்றியபோது எட்டாம் வகுப்பு படித்த அர்ஜுன் என்பவருடன் 2015ல் திருமணம் ஆகி உள்ளது அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தாய் வீட்டில் வந்து தங்கி உள்ளார். ஒன்றை ஆண்டுகள் தங்கிய நிலையில் அடுத்ததாக கோபாலகிருஷ்ணன் என்பவரை ஒரு தனியார் துணிக்கடையில் வேலை செய்யும்போது பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.

வேறு பெண்ணுடனான உறவை மறைத்து திருமணம்… தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

அவரிடம் ஒன்றறை ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில் அவருக்கும் தெரியாமல் அடுத்த நபர் ஆன ஹரியை ஜாதி மேட்ரிமோனி மூலமாக திருமணம் செய்தார் ஹரி ஏற்கனவே விவாகரத்து ஆன நிலையில் நல்ல வசதியாகவும் அன்பாக பார்த்துக்கொண்ட அவரிடம் தற்போது ஒன்றரை ஆண்டு வாழ்ந்து வாழ்ந்த நிலையில் அவர்கள் வீட்டிலேயே நகை திருடுவது ஹரிவுடைய அம்மாவுடன் பிரச்சினை தங்கையுடன் பிரச்சினை என ஏற்பட்டு தாய் வீட்டுக்கு போவது போல் சண்டை ஏற்பட்டு சென்றுள்ளார் ஆனால் ஹரி அவரை மிகவும் நம்பிய நிலையில் தீபாவோ ஹரியிடம் தான் கர்ப்பமாக உள்ளதாக கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் அட்டை போட்டுக்கொண்டு ஹரியை நம்ப வைத்துள்ளார் இந்த நிலையில் தான் குழந்தையுடன் சென்றபோது ஹரி தனக்கு தான் பிறந்தது என பூரிப்படைந்து இருந்த நிலையில் தீபா ஏமாற்றிவிட்டுச் சென்றார்

மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த - தீபா கைது மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் பலரிடம் புதுபெண்ணாக வலம் வந்த - தீபா கைது

பரமத்தி வேலூரில் இருந்து தீபாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும்போது ஒருநாள் முன்னர் புதியதாக வாங்கிய செல்போன் எண்ணில் அடிக்கடி கால் வந்தது அதனை எடுத்து போலீஸார் என்ன கால் வருகிறது என கேட்டபோது தீபா புதிய செல்போன் வாங்கி அந்த எண்ணெய் உடனடியாக ஒரு மேட்ரிமோனியில் நம்பரையும் பதிவு செய்துள்ளார் அதனால் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண் கேட்டு அழைத்துள்ளனர், இதைக் கண்ட போலீசார் ஒவ்வொரு முறையும் வரும் காலை செய்பவரிடம் ஏற்கனவே திருமணம் முடிவாகிவிட்டது நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி அவர்களுக்கு பதில் அளித்தவாறு சென்னை வரையும் வந்தது போலீஸாரையே மிகுந்த சிரிப்பொலியும் வியப்பையும் ஏற்படுத்தியது தொடர்ந்து இந்த குழந்தை கடத்தல், கல்யாணராணி தீபாவை பிடிக்க கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் தயாள் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் திருவேற்காடு உள்ள மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் திருவிக காவல் நிலையத்தில் சேர்ந்தவர்களின் முயற்சியால் பிடிபட்டதும் இவர் கதையில் பின்புலம் வெளியானதும் போலீஸ் வட்டாரம் உள்ளிட்ட அனைவரிடமும் பரபரப்பாக பேசப்படுகிறது

ரயில்வே ஒப்பந்த பணி கால தாமத அபராத தொகையை குறைக்க லஞ்சம் வாங்கிய அதிகாரி – கைது

MUST READ