முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி திருவாடானை நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி இவர் மாநில பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகநூலில் இஸ்லாமிய குரு தலைவர்களை மையப்படுத்தி அவதூறு பரப்பி பதிவிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் அகமது பாய்ஸ் என்பவர் வழக்கு தாக்கல் செய்ததன் அடிப்படையில் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் தொண்டி போலீசார் கடந்த 7 ஆம் தேதி குருஜி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு உடனடியாக கம்பம் மருத்துவமனை புதிய கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் – சீமான்!
இந்நிலையில் குருஜி தரப்பில் ஜாமீன் கேட்டு திருவாடானை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பிலும் மற்றும் மனுதாரர் தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் பிரசாத் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.