Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

-

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உள்பட இரண்டு பெயரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

சென்னையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியின் போது வாட்ஸ்அப் குழு மூலம் பலருக்கு போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

 

அதன் அடிப்படையில் பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்த காதர் மைதீன் என்பவரை போலீசார் கைது செய்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 8 கிராம் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் போதை பொருள் விற்பனை

அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுல்தான் என்பவர் மூலம் வாட்ஸ் அப் குழுவில் இணைந்ததும் அக்குழுவில் ராகுல் என்பவர் அடிக்கடி போதை பொருள் வாங்கியதும் தெரிய வந்தது.

இதை அடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அதில் அவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினர் என்பது தெரியவந்தது. இந்த குழுவில் மேலும் யார் யார் இருக்கிறார்கள் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

MUST READ