Homeசெய்திகள்க்ரைம்8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவு

8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவு

-

- Advertisement -

சென்னையில் கடந்த 8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் சிக்கி உள்ளதாக கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவுசென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக முகமுது சொகைல், விக்ணேஷ்வரன், யுவராஜ், பிரவின், பாலசந்தர் ஆகியோரை கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களின் கூட்டாளி நிகில் என்பவரை கடந்த 21 ஆம் தேதி பெங்களூருவில் வைத்து கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் நைஜிரீயா நாட்டைச் சேர்ந்தவர்களான   கிறிஸ்டோபர் ஒலுச்சுக்வா, சமீர் சலா நூரல்தீன், எதிம் ஆன்டிகா, எஃபியோங் எடிம், ஷியூ அடெலேக் ஆகியவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சையத் அக்சன, திபக் அந்தோனி ராஜ் ஆகியோர் கடந்த 03.04.2025 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர். அவர்களிடமிருந்து 4 கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி 08.04.2025 ஆம் தேதி பெங்களூரூவைச் சேர்ந்த கிரன் பனிக்கர் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்தும் 1 கிராம் ஹெராயின் மற்றும் 2கிராம் மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது. மேலும்  நேற்று  கிறிஸ்டோபர் ஒலுச்சுக்வா, சமீர் சலா நூரல்தீன், எதிம் ஆன்டிகா, எஃபியோங் எடிம், ஷியூ அடெலேக் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடமிருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன் 300 கிராம் கஞ்சா கிராம் ஹெராயின், ரூபாய் 7500 மற்றும் எடை மிசின் ஒன்று கைப்பற்றப்பட்டது.8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவுகடந்த ஒரு மாதத்தில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நைஜிரியா நாட்டை சார்ந்த 7 பேரும், சூடான் நாட்டை சேர்ந்த ஒருவரும் பெங்களுருவை சேர்ந்த இருவரும் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், மொத்தம் 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப்பொருள் கும்பலை கைது செய்தது எப்படி என்பது தொடர்பாக சென்னை காவல்துறை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளாா்.

”சென்னையில் போதைப்பொருள் கடத்தி வருவது, விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களை தடுப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 8 மாதங்களாக பல்வேறு நடவடிக்கைகளை இந்த பிரிவு எடுத்து வருகிறது. தற்போது கைதாகி உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும், சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் பிற மாநிலத்தில் இருந்து போதைப்பொருள் கிடைக்கிறது. அதனை சென்னைக்கு கடத்தி வந்து சப்ளை செய்கின்றனர்.

நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் பார்ட்டிகளுக்கு சப்ளை செய்ய மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சொல்ல படுகிறது. குறிப்பாக போதைப்பொருள் சப்ளையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை சுமார் 8 மாதத்தில் போதைப்பொருள் தொடர்பாக 996 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சா தொடர்பாக 784 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக 2900 பேர் கைதாகியுள்ளனர்.8 மாதத்தில் 21 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்…அதிரடி காட்டிய தனிப்படை பிரிவுபோதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளோம். அது தொடர்பாக 319 பேரை கைது செய்துள்ளோம். போதைப்பொருள் வழக்கில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 138 பேர் கைது செய்துள்ளோம். 8 மாதத்தில் சென்னையில் 21.9 கிலோ மெத்தபெட்டமைனௌ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 மாதத்தில் 352 பேர் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்கை முழுமையாக கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன்கள் யார் யார் என்பதனை கண்டறிந்து வருகிறோம். நைஜீரியா நாட்டில் இருந்து கூட போதைப்பொருள் நெட்வொர்க் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

சென்னைக்கு பிற மாநிலத்தில் இருந்து தான் மெத்தபெட்டமைன் கடத்தி வரப்படுகிறது. பிற மாநில போலீசாரும் சென்னை போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.  போதைப்பொருள் கடத்தி வரப்படும் போது சுங்கச்சாவடிகளில் சோதனையின் போது கண்டறியவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதால் போதைப்பொருள் பறிமுதலுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. தற்போது கைதாகி உள்ளவர்களின் கும்பலில் தலைவன் யாருமில்லை. மெத்தப்பெட்டமைன் ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய். கைதான நைஜிரியர்கள் கல்வி விசாவில் வந்திருப்பது தெரிய வந்துள்ளது” என்று காவல் இணை ஆணையர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை

MUST READ