சென்னை அரும்பாக்கம் பிரகதீஸ்வரர் நகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் (30) எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இவர் நந்தினி என்பவரை காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சதீஷிற்கும் நந்தினிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாதத்திற்கு முன் நந்தினி கணவரை விட்டு பிரிந்து கோயம்பேடு பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் பிறகு சதீஷ் பலமுறை அவரை அரும்பாக்கம் வீட்டிற்கு வரும்படி அழைத்தும் நந்தினி வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையோடு சதீஷ் இருந்து வந்ததாகவும் நேற்றிரவு சதீஷ் தனது மனைவி நந்தினிக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். “நீ நலமாக வாழ்” என கூறி இணைப்பை துண்டித்து விட்டு பிறகு சதீஷ் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
https://www.apcnewstamil.com/news/crime-news/in-police-custody-actress-wearing-make-up/96154
நந்தினி உடனே பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்த போது சதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் போலீசார் சதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சதீஷ் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் ஆன்லைன் கேம் விளையாடி சுமார் 14 லட்சத்தை சதீஷ் இழந்ததாகவும், அதை தான் உடனே செலுத்திவிட்டதாகவும் உயிரிழந்த சதீஷின் தந்தை பிச்சாண்டி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக சதிஷ் வேலைக்கு செல்லாமல் குடித்ததால் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்ப தகராறில் தனது மகனை பெண்ணின் தந்தை பீர் பாட்டிலால் தாக்கியதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இதனால் தனது மகன் தற்கொலைக்கு காரணமான பெண் வீட்டார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த செல்போனை ஆராய்ந்தால் என்ன பிரச்சனை நடந்தது என்பது குறித்து முழு விவரம் தெரிய வரும் எனவும் அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மனைவி நந்தினி உள்ளிட்ட உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.