Homeசெய்திகள்க்ரைம்மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைது

-

மதுபோதை தகராறில் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கொலை வழக்கில் கைது. மதுபோதையில் தாக்கி தள்ளி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மதுபோதையில் என்ன செய்தேன் என தெரியவில்லை என வாக்குமூலம்.

கடந்த 8 ஆம் தேதி  இரவு மைலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்குள்ள எஸ்கலேட்டரில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக பயணிகள் அருகில் இருந்த நிலைய மேலாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, முதல் தளத்தில் இருந்து 2வது தளத்துக்கு செல்லும் நகரும் படிக்கட்டில் சடலம் கிடப்பது தெரியவந்தது.

பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மயிலாப்பூர் பிடாரி கோயில் தெருவை சேர்ந்த லூயிஸ் பத்தியாஸ் (40), பெயின்டர் என்பது தெரியவந்தது. இவருக்கு குடிப்பக்கம் அதிகமானதால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 17 ஆண்டுகளாக சாலை, கோயில் வாசல்களில் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மயிலாப்பூர் மதுபோதையில் முதியவர் கொலை – ஒருவர் கைதுமேலும், ரயில்வே போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில் மதுபோதையில் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டதும், அதில் லூயிசை ஒருவர் கீழே தள்ளிவிட்டதும் அதில் நகரும் படிக்கட்டில் மேலிருந்து கீழே விழுந்த லூயிசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த சேட்டு (64) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவதும், மதுபோதையில் தான் என்ன செய்தேன் என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சேட்டுவை திருவான்மியூர் ரயில்வே போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

MUST READ