Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் வழிப்பறி கொள்ளையன் மீது என்கவுண்டர் பாய்ந்தது

சென்னையில் வழிப்பறி கொள்ளையன் மீது என்கவுண்டர் பாய்ந்தது

-

- Advertisement -

சென்னை அடையார், வேளச்சேரி, திருவான்மியூர், கிண்டி ஆகிய பல்வேறு இடங்களில் வயதான முதியவர்களிடம் மர்ம நபர்கள் இருவர் சையின் பறிப்பில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் அடையார் காவல் மாவட்ட போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. இதனிடையே தனிப்படை போலீசார்  கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு பின் தொடர்ந்தனர்.

சென்னையில் வழிப்பறி கொள்ளையன் மீது என்கவுண்டர் பாய்ந்தது

சையின் பறிப்பு திருடர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் தப்பிச்செல்ல விமானநிலையத்திற்கு சென்றனர். அப்போது அவர்களை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.  குற்றவாளிகளை விசாரணைக்கு அழைத்து செல்லும் போது கொள்ளையன் ஜாபர், காவல் ஆய்வாளர் புகாரியை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ஆய்வாளர் ஒதுங்கிக் கொள்ளவே குண்டுகள் அவரது ஜீப்பில் பாய்ந்தன. இதையடுத்து தற்காப்புக்காக ஆய்வாளர் புகாரி சுட்டுள்ளார். இதில் நெஞ்சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜாபர் சுருண்டு விழுந்து பலியானர். கொள்ளையன் ஜாபர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கர்நாடக பதிவெண் கொண்டது.

ஈரானிய கொள்ளையர்கள் மராட்டிய கர்நாடக எல்லை பகுதியில் உள்ள பிதர் மாவட்டத்திலும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். கொள்ளையன் ஜாபருக்கு இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய நகரங்களும் அத்துபடி அதனால் எங்கெங்கு தங்குவது? கைவரிசை காட்டி விட்டு எப்படி தப்புவது? என்பதை தெளிவாக செய்யக் கூடியவர் என போலீசார் கூறுகின்றனர்.

மராட்டிய மாநில சிறைச்சாலையில் ஜாபர் இருந்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் தான்  வெளிவந்துள்ளார். கொள்ளையர்களில் ஜாபரும், நிஜாமும், இரானி என்பவரும் விமானத்தில் சென்னை வந்துள்ளனர். சல்மான் இருசக்கர வாகனத்திலேயே சென்னை வந்துள்ளார். சென்னை வந்ததும் இந்த வாகனத்தை ஜாபரிடம் ஒப்படைத்துள்ளார்.­

ஜாபர் பைக்கை ஓட்ட பின்னால் அமர்ந்திருந்த  நிஜாமும் இரானியும் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். செயின் பறிப்பு சம்பவங்களை செய்துவிட்டு, அந்த நகைகளை சல்மானிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்கள். சல்மான்  பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜயவாடா சென்று அங்கிருந்து மும்பை செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் தான் அவர் ஓங்கோல் அருகே தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆறுமாத காதல்…காதலியின் திடிர் மாற்றம்…ஆத்திரத்தில் காதலனின் வெறிச்செயல்

MUST READ