திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு!
சிங்கப்பூர் வெளிநாட்டு பங்குகளை கையகப்படுத்தியதிலும் இலங்கை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததிலும் இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாகக் கூறி, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு
சுமார் 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியும் அமலாக்கத்துறை நடவடிக்கை.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை 2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடத்தியது.மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கியது.
ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில், வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.