சென்னை கொளத்தூரில் விலை உயர்ந்த கிளிகளை திருடிய 3 பேர் கைது.
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் ரமேஷ். இவர் கொளத்தூர் பள்ளி சாலையில் கிளி போன்ற (வீட்டில் வளர்க்கும்) பறவைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் கிளி வாங்குவது போல் வந்து பேச்சுக்கொடுத்த மூன்று நபர்கள் திடீரென Larry red வகை கிளிகள் மூன்றை கூண்டோடு தூக்கிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினர்.
ஒரு கிளியின் விலை 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இது தொடர்பாக அரவிந்த் ரமேஷ் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ்ச் அருகே பதுங்கி இருந்த பாடியைச் சேர்ந்த முஜிப் ரஹ்மான் வயது 30 ,விஜய் வயது 28 கொரட்டூரை சேர்ந்த கலைச்செல்வன் வயது 31 ஆகிய 3 பேரை ராஜமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
மூன்று கிளிகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். ஒரு கிளியின் விலை 35 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடதக்கது