Homeசெய்திகள்க்ரைம்சிபிஐ அதிகாரி என மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு

சிபிஐ அதிகாரி என மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு

-

சிபிஐ அதிகாரி எனக் கூறி கட்டுமான நிறுவன அதிபரை மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு

சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (52). Dharani கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி இவரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை ராஜேந்திரகுமார் என அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் CBI-ல் பணிபுரிவதாகவும், டில்லியில் உள்ள  ICICI வங்கியில்  ரூபாய 25,00,000/- முகமது வாசிம் கான் என்பவருக்கு நீங்கள் கடன்  வாங்கி கொடுத்துள்ளீர்கள். அந்த பணம் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டு ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன.

சிபிஐ அதிகாரி என மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் இதுவரை 25 பேரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து உங்களுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக்கூறி மிரட்டியுள்ளார்.

ரமேஷ்பாபுவை நம்ப வைப்பதற்காக சிபிஐ அடையாள அட்டை, ஒன்றிய அரசின் நிதித்துறை கடிதம் ஆகியவற்றை அவரது செல்போன் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். குடும்பத்தினர் விவரம்? என்ன தொழில் செய்கிறீர்கள்? எத்தனை ஆண்டுகளாக தொழில் செய்கிறீர்கள்? எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளீர்கள்? என துருவித்துருவி மொத்தம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.

தனக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் ஒரு வங்கி கணக்கு உள்ளது என ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார். அந்த கணக்கில் எவ்வளவு ரூபாய் எத்தனை பைசா? இருக்கிறது என சரியாக சொல்லுங்கள் பார்ப்போம் என மிரட்டும் பானியில் மீண்டும் பேசியுள்ளார்.

84 ஆயிரம் ரூபாய் மற்றும் சில்லறை இருக்கிறது என ரமேஷ் பாபு பதில் அளித்துள்ளார். அதை அப்படியே நான் சொல்கிற கணக்குக்கு மாற்றுங்கள் என கூறியுள்ளார். ஆனால் பணத்தை பரிமாற்றம் செய்யும்போது சிறிது கால தாமதமாகவே சிபிஐ அதிகாரியையே ஏமாற்றுகிறீர்களா இன்னும் சற்று  நேரத்தில் உன்னை லோக்கல் போலீஸை வைத்து தூக்கி விடுவோம் என மிரட்டியுள்ளார்.

தொடர்ச்சியாக ரமேஷ் பாபுவை பயமுறுத்தி அவரின் பஞ்சாப் நேஷனல் பேங்க், கே.கே.நகர். அக்கவுண்டில் இருந்து ரூபாயை 8000/- எட்டு தவணைகளாக phone pay  மூலம் ரூபாய் 64,000/-  தொகையை மோசடி நபர் பறித்துள்ளார்.

நடந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்று தெரிவித்த போது  மோசடி கும்பலை சேர்ந்தவரின் கைவரிசை என தெரிய வந்தது. இதே போல் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி மிரட்டி பணம் பறிப்பதாக தங்களுக்கும் புகார்கள் வந்துள்ளன.

 

சரியான நேரத்தில் தகவல் தெரிவித்தால் மட்டுமே சம்மந்தப்பட்ட மோசடி கும்பலின் வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை முடக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஏமாற்றப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த ரமேஷ்பாபு தியாகராய நகர் துணை ஆணையரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன் பேரில் எம்ஜிஆர் நகர் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ