Homeசெய்திகள்க்ரைம்போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வாலிபர் கைது

போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வாலிபர் கைது

-

போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த கேரளா வாலிபரைசைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றி, மக்களின் பணத்தை மோசடி செய்கின்றனர்.

2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில்,அர்ஜுன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தன்னை “FOREX TRADING” எனும் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை சமூக ஊடகங்கள். குறுந்தகவல் சேவைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி புகார்தாரரின் மனதில் மோசடிக்காரர் நம்பிக்கையை கொடுத்துள்ளார்

மேலும் இந்த நிறுவனம் SEBI- ஆல் அங்கீகரிக்கபட்டுள்ளது என புகார்தாரரை நம்ப வைத்துள்ளார். மேலும் அர்ஜுனை இனிமையான வார்த்தை மூலம் நம்பவைத்தும் மற்றும் பல முக்கியமான தொழிலதிபர்கள் பெயர்களை சொல்லியும் நம்பவைத்து உள்ளார். தொடர்ந்து மோசடி செய்யும் நிறுவனத்திலிருந்து பலர் பாதிக்கப்பட்டவரை தொடர்புகொண்டு முதலீடு செய்ய வைத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் பல பரிவர்த்தனைகளில் ரூ. 22,220,400/-யை பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளார். மோசடிக்காரர்கள் மொத்த முதலீட்டை திருப்பித் தருவதாகக் கூறி, மேலும் ரூபாய் 50,00,000/- முதலீடு செய்ய வேண்டுமென்று ஏமாற்ற முயன்றுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவருக்கு சந்தேகம் வந்ததால் தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். உடனடியாக மோசடிக்காரர் தன்னுடைய கம்பெனி பெயரை “XTREME TRADERS LTD” யில் இருந்து CATALYST MARKETS LTD” மாற்றி உள்ளார்கள்.

இதிலிருந்து அர்ஜுன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் குற்றம் ரிபோர்டிங் போர்டல்-இல் புகார் பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில், State Cyber Crime Investigation Centre Cr.No:54/2024, u/s 66 D of the Information Technology Act 2000, Section 318 (2) and 319 (2) of the Indian Penal code என வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்யப்பட்டது.

இந்த வழக்கின் நிதி பரிவர்த்தனைகளை சைபர் குற்றப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக ஆராய்ந்தபோது, கேரளாவில் உள்ள உபயத்துல்லா என்பவர். Swabah Feed agency என்ற பெயரில் SBI வங்கியில் ஒரு பொய்யான current account தொடங்கி மோசடி செய்த நபருக்கு கொடுத்து அதன் மூலம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதன் மூலம் அவர் மோசடிக்காரர்களுக்கு தேவையான வணிக கணக்குகளை வழங்கியதுடன், அதை மோசடி செய்யும் நோக்கத்திலும் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதற்காக Ubaiyadullah கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

MUST READ