Homeசெய்திகள்க்ரைம்திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது

திருவள்ளூரில் போலி மருத்துவர் கைது

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பிளஸ் 2 படித்துவிட்டு, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று அந்த கிளினிக்கில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

போலி மருத்துவர்கள்

அப்போது, காளிமுத்து (27) என்பவர், பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவம் படித்ததாக கூறி பொதுமக்களுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலி மருத்துவர் காளிமுத்துவை கைதுசெய்த ஆரம்பாக்கம் போலீசார், அங்கு போலி செவிலியராக பணிபுரிந்த பாத்திமா என்பரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ