Homeசெய்திகள்க்ரைம்கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

-

ஈரோடு அருகே கள்ள நோட்டுகளை கலர் பிரிண்டர் மூலம் தயாரித்து புழக்கத்தில் விட்ட நான்கு பேரை கைது செய்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கள்ளநோட்டு அடிப்பதை குடிசை தொழிலாக மாற்றிய குடும்பத்தினர் கைது

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர் சுற்று பகுதி ஊர்களில் உள்ள சந்தைகளுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். திங்களூர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு நபர் 500 ரூபாய் பணத்தை கொடுத்து 100 ரூபாய் மதிப்பிற்கு காய்கறிகள் வாங்கி விட்டு மீதம் 400 ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளார்.

பின்னர் அந்த 500 ரூபாய் நோட்டை பார்த்தபோது கொஞ்சம் வித்தியாசமாக இருந்துள்ளது, இதே போல அருகில் இருந்த பழக்கடையிலும் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்க்கு பழங்கள் வாங்கிவிட்டு மீதிப்பணம் 400 ரூபாயை வாங்கி சென்றுள்ளார்.

வாழ்ந்தால் கள்ளக்காதலனுடன் தான் வாழ்வேன் – சோகத்தில் முடிந்த வாழ்க்கை

அங்கு கொடுத்த பணமும் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகமடைந்து அந்த நபரை பின்தொடர்ந்து சென்று பார்த்த்துள்ளனர். இவர்களை போலவே மேலும் இருவர் சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு காரில் ஏறி சென்றனர்.

வித்தியாசமாக இருந்த ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்பது தெரியவந்ததால், இது குறித்து திங்களூர் காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளி வில்லியம்புதூரை சேர்ந்த ஜெயராஜ் (40) மற்றும் அவரது தந்தை ஜெயபால், தாயார் சரசு மற்றும் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மேரி மிஸ்டில்லா என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட நால்வரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர்களின் வீட்டில் சோதனையிட்ட போலீசார், கலர் ஜெராக்ஸ் மிஷின் இரண்டு மற்றும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர்.

தலைமறைவாக இருந்த செயின் திருடன் கைது

இவர்கள் நால்வரும் பெருந்துறை, திருப்பூர், கோபி, திங்களூர், புளியம்பட்டி, தாராபுரம், காங்கேயம் உட்பட பல்வேறு ஊர்களில் சந்தைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் மாலை இருட்டிய பிறகு சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போல் கள்ள நோட்டுக்களை மாற்றி உள்ளனர்.

MUST READ