Homeசெய்திகள்க்ரைம்பிரபல தமிழ் யூடியூபருக்கு அபராதம்

பிரபல தமிழ் யூடியூபருக்கு அபராதம்

-

பிரபல தமிழ் யூடியூபருக்கு அபராதம்பிரபல தமிழ் யூடியூபருக்கு சென்னை காவல்துறை அபராதம் விதித்தது.

போக்குவரத்து விதி மீறலுக்காக நடிகர் பிரசாந்துக்கு சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் யூடியூபர் இர்ஃபானுக்கும் சென்னை காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

சமீப காலமாக யூடியூபர் இர்ஃபான் சர்ச்சையில் சிக்கிக் விவாதப் பொருளாக மாறிவருகிறார். அன்மையில் அவரது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவித்து சிக்கல்களில் மாட்டிக் கொண்ட நிலையில் தற்போது நம்பர் பிளேட் இல்லாத  இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் அவர் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக யூடியூபர் இர்பானுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர். அத்துடன், சரியான நம்பர் பிளேட் இல்லாததற்கும் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

யூடியூபர் இர்ஃபான் உயர் ரக இருசக்கர வாகனம் ஒன்றின் டெஸ்ட் டிரைவ் செய்தபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வாகனத்தில் நம்பர் பிளேட் விதிகளை மீறி இருந்ததாகவும் அதுமட்டுமின்றி இர்பான் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை இயக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி- 5 ஆண்டு சிறை

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் பிரசாந்த் தனது ‘அந்தகன்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது தொகுப்பாளினி உடன் பாண்டி பஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் உலா வந்தபடியே கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அவருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு காவல்துறையினர் அபராதம் விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ