Homeசெய்திகள்க்ரைம்மணப்பாறை அருகே வாகனம் மோதி விவசாயி பலி

மணப்பாறை அருகே வாகனம் மோதி விவசாயி பலி

-

மணப்பாறை அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா்.

மணப்பாறை அருகே வாகனம் மோதி விவசாயி பலிமணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி அ. வடிவேல்(48). இவா் ஜூலை – 17 திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது திண்டுக்கல் நோக்கிச் சென்ற பைக் மோதி பலத்த காயமடைந்தார்.

பின்னர் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அதேபோல் பைக்கில் வந்த இளைஞரும் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா் வடிவேல் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேற்கொண்ட விசாரணையில் பைக்கில் வந்தவா் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மகன் குமாா் (25) என்பதும், அவா் வந்த பைக் காணாமல் போய் தேடப்பட்டு வந்தது என்பதும் தெரியவந்தது. இதனை தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ