வலங்கைமான் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மகன் மது போதையில் வீட்டில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் தந்தையே மகனை கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நார்த்தங்குடி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் கார்த்தி(36).இவர் குடந்தையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது. இவர்களுக்கு சமித்தா என்ற மகள் உள்ளார் இந்நிலையில் கார்த்திக்குக்கும் மனைவி நந்தினியுடன் குடித்துவிட்டு தினசரி தகராறு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக நந்தினி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவனை விட்டு பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கார்த்தி தினசரி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இரவு வழக்கம் போல் கார்த்தி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு தாயை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த கார்த்தியின் தந்தை சீனிவாசன் இரும்பு கம்பியால் கார்த்திகை தாக்கினார். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர் மேலும் இறந்த கார்த்திக்கின் சடலத்தை போலீசார் கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.வலங்கைமான் அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த மகனை தந்தை கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.