காசோலை மோசடி தொடர்பாக பைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் பைனான்சியர் ககன் போத்ராவிடம் தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.2.6 கோடி லட்சம் கடன் பெற்றுள்ளார்.
அப்போது பைனான்சியர் ககன் போத்ராவிடம் பெற்ற கடனுக்காக, தயாரிப்பாளர் சதீஷ்குமார் ரூ.45 லட்சத்திற்கு வழங்கிய காசோலை வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்தது.
ரயில் டிக்கெட் பரிசோதகர் என மோசடியில் ஈடுபட்டவர் கைது (apcnewstamil.com)
இதுதொடர்பாக பைனான்சியர் ககன் போத்ரா தயாரிப்பாளர் சதீஷ்குமார் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு ஜார்ஜ் டவுன் நான்காவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா முன்பு விசாரணைக்கு வந்தது.
காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.