Homeசெய்திகள்க்ரைம்கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைது

கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைது

-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார்.இவரது மீன் கடை அருகே கார்த்திக் என்பவரும் மீன் கடை நடத்தி வருகிறார். இருவரும் உறவினர்கள்.இதில் வெள்ளத்துரை இரவு மீன் கடையில் தூங்குவார்.

மேலும் வெள்ளத்துரை மீன் வியாபாரம் அதிகம் இருக்கும் ஞாயிற்றுக்கிழமையில  மீன் வியாபாரம் அதிகம் விற்பனை நடைபெறும் ஆனால் அருகில் உள்ள கார்த்திக் கடையில் அதிக விற்பனை இருப்பது கிடையாது. இதனால் இது கார்த்திக்கை மிகவும் ஆத்திரம் அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தான் நேற்று முன் தினம் இரவு வெள்ளத்துரையும் அவரது கடையில் பணிபுரியும் சாமி இருவரும்  மீன் கடையில் படுத்து தூங்கியுயுள்ளார்.

நள்ளிரவில் மீன் கடைக்கு வந்த மர்ம நபர்கள் வெள்ளத்துரையும் மற்றும் சாமியையும் சரமாரியாக வெட்டி உள்ளனர் இதில் வெள்ளத்துரை,சாமியும் சம்பவ இடத்திலேயே பலியானார். மர்ம நபர்கள் கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இறந்தவர்களின் உடல்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில்பட்டியில் மீன் வியாபாரி கொலை – 3 பேர் கைதுமேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.சம்பவம் தெரிந்தவுடன் இறந்த வெள்ளத் துரை உறவினர்கள் மீன் கடை மற்றும் மருத்துவமனை முன்பு கூடியதால்  பதட்டமான சூழ்நிலை உருவானது. போலீசார் இந்த கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.மேலும் தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இதில் முதல் கட்ட விசாரணையில் வெள்ளைத்துரை மீன் கடை அருகே மீன் கடை நடத்தி வரும் கார்த்திக் என்பவர் இந்த கொலை செய்திருக்கலாம் என்ற முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் கார்த்திக் சம்பவத்தன்று இரவு வெள்ளத்துரையின் உடல் மருத்துவமனையில் இருந்தபோது கார்த்திக் அங்கு வந்து வெள்ளத்துரையை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அழுது புலம்பி நாடகமாடியுள்ளார்.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடி காட்சிகள் மற்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததில் கார்த்திக் தான் கொலை செய்திருக்கலாம் என்றகோலத்தில் விசாரணை நடத்திய போது மறுநாள் கார்த்திக் மற்றும் அவர் கடையில் பணிபுரியும் 3 பேரையும் தேடியபோது அவர்கள் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு பஸ்ஸில் தப்பியோட முயன்றுள்ளனர்.

அவர்களை கோவில்பட்டி தனி படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது .

வெள்ளத்துரை கார்த்திக்கு உறவினர் ஆவார் இருந்தாலும் வெள்ளதுரையின் கடையில் எப்போதும் அதிகம் வியாபாரம் நடக்கும் இது ஒரு கட்டத்தில் கார்த்திகை கோபமடைய செய்துள்ளது. பின்னர் வெள்ளத்துரை இருந்தால் நமது தொழிலை நடத்த முடியாது என நினைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அந்தத் திட்டத்திற்கு கார்த்திக்கின் கடையில் பணிபுரியும் சேர்மக்கனி மற்றும் மாரிராஜ் இருவரையும் கூட்டு சேர்த்து சம்பவத்தன்று இரவு வெள்ளத்துரை மற்றும் அந்த கடையில் பணிபுரியும் சாமி இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தொழில்போட்டியில் கொலை செய்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது கடையின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ