Homeசெய்திகள்க்ரைம்திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது...!

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது…!

-

போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஐந்து பேர் கைது. மேலும் நான்கு பேருக்கு போலீஸ் வலை.

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது...!திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே அணைப்பதி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (54).  எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவர் திருமணமாகாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி பிற்பகல் அணைப்பதியில் தனது வீட்டில் இருந்த ரங்கசாமி 4 பேர் கொண்ட கும்பல், தங்களை போலீஸ் எனவும், விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் தன்னை அந்த கும்பல் கடத்திச் சென்றதாகவும், அன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தன்னை அடைத்து வைத்து,  மீண்டும் அவர்களாகவே காரில் அழைத்து வந்து திருப்பூர் கோயில் வழி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றதாகவும், இதையடுத்து திருப்பூரிலிருந்து பஸ்ஸில் வீடு வந்த ரங்கசாமி நேற்று பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.

திருப்பூரில் போலீசார் என கூறி ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது...!புகாரின் அடிப்படையில் பெருமாநல்லூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், நேற்று இரவு பெருமாநல்லூர் அருகே வாவிபாளையம் சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது, ரங்கசாமியை கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் ஐந்து பேர் கடத்தலுக்கு பயன்படுத்திய காரில் வந்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,

ரங்கசாமிக்கு அணைப்பது பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது, இதில் 80 சென்ட் அளவுள்ள இடத்தை விற்க முடிவு செய்துள்ளார்.

அந்த இடத்தை திருப்பூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் அவரது மனைவி கெளரி மற்றும் மேலும் ஒருவருடன் சேர்த்து ரங்கசாமிக்கு ஆறு லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்து மேலும் நான்கு மாதத்திற்குள் மீதி தொகையை கொடுத்து கிரையம் செய்து கொள்வதாக ஒப்பந்தம் செய்து, அந்த ஒப்பந்த பத்திரத்தை கடந்த 2014 -ம் ஆண்டு நவம்பர் மாதம் குன்னத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

தொடர் சம்பவம் – பூட்டிய வீடு திக்! திக்!

இந்நிலையில் திடீரென சண்முகத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், ஒப்பந்தம் செய்த படி ரங்கசாமிக்கு மீதி தொகையை  கொடுத்து கிரையம் பெற முடியாமல் போனது.

காலம் அப்படியே கடந்து, தற்போது ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு,  ரங்கசாமியை சந்தித்த சண்முகம், மீதி தொகையை கொடுப்பதாக கூறி நிலத்தை கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆறு ஆண்டுகள் காலம் தாழ்த்தி வந்ததால் அன்று பேசிய தொகைக்கு நிலத்தை தர முடியாது என்றும், தற்போதய மார்க்கெட் விலையை கொடுத்தால் தான் கிரையம் செய்து தருவேன் என ரங்கசாமி சொல்லியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 6-ம் தேதி பிற்பகல் நான்கு பேருரை காரில் அணைப்பதியில் உள்ள ரங்கசாமியின் வீட்டிற்கு அவரை கடத்தி வர அனுப்பியுள்ளார்.

அங்கு, தங்களை போலீஸ் என்றும் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக கூறி ரங்கசாமியை காரில் கடத்திச் சென்று, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்து, மீண்டும், அவர்களாகவே ரங்கசாமியை காரில் அழைத்து வந்து திருப்பூர் கோயில் வழி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து காரை பறிமுதல் செய்து, காரில் வந்த கடத்தல் கும்பலை சேர்ந்த ஸ்டாலின், சதாசிவம், பாஸ்கரன், சூரிய பிரபாகரன் மற்றும் ஈஸ்வரன் என ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் கடத்தலுக்கு காரணமான தலைமறைவாக இருக்கும் சண்முகம் உட்பட மேலும் நான்கு பேரை பெருமாநல்லூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ