Homeசெய்திகள்க்ரைம்17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு

-

- Advertisement -

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் மற்றும்   கணவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த  17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தமிழ்கொடி தலைமையிலான அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதன்பின், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து முடித்த 17 வயது சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது என்று பொய் சொல்லி அவரது பெற்றோர் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விக்ரம் (23) என்பவருக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் 10ம் தேதி சிறுவாபுரி முருகன் கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், உடனடியாக சிறுமி கர்ப்பம் அடைந்ததால் அந்த கருவை கலைத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மேலும் விசாரணை நடத்திவிட்டு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கைபதிவு செய்து சிறுமியின் கணவர் விக்ரம், இவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

ரூ.4.33 லட்சம் மோசடி செய்தவர் கைது – கூட்டாளி தலைமறைவு

MUST READ